News March 17, 2024
மீண்டும் மாணிக்கம் தாகூர் போட்டி?

நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே விருதுநகரில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள எம்பி மாணிக்கம் தாகூருக்கு மீண்டும் விருதுநகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு ஆதரவாக தேர்தல் களப்பணியை காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக துவங்கியுள்ளனர்.
Similar News
News September 24, 2025
சாத்தூரில் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலின்

சாத்தூரில் நேற்று திமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக இளைஞர் அணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அதில் தென்மாவட்டங்களில் ஏதாவது ஒரு தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என நிர்வாகி ஒருவர் கோரிக்கை வைத்தார். மு.க.ஸ்டாலின் அனுமதித்தால் நான் இதே சாத்தூர் தொகுதியில் போட்டியிட தயாராக இருக்கிறேன் என்றார்.
News September 24, 2025
விருதுநகர்: 10 பவுன் தங்க சங்கிலி பறிப்பு!

அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டியை சேர்ந்த லலிதா (62), 3 நாட்களுக்கு முன்பு ரயில்வே ஸ்டேஷன் அருகில் வாக்கிங் சென்றார். அப்போது ஒரு நபர் அவரிடம் இருந்த 10 பவுன் தாலி செயினை பறித்து ஓடிவிட்டார். இதில் CCTV கேமிராக்களை ஆய்வு செய்த போலீசார், இச்சம்பவத்தில் ஈடுப்பட்ட செம்பட்டியை சேர்ந்த அடைக்கலம் (32) என்பவரை கைது செய்து 10 பவுன் செயினை பறிமுதல் செய்தனர்.
News September 24, 2025
விருதுநகர்: அரசு மருத்துவமனையில் பிரச்சனையா.?

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் முறையாக தரப்படவில்லை என புகார் இருக்கிறதா? இனிமேல் நீங்க செல்லும் போது இது நடந்தால்?? தயங்கமால் விருதுநகர் மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 04562- 252388 அழைத்து தெரியப்படுத்துங்க. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும். இதை மற்றவர்களு\ம் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க. மறக்காம நீங்க SAVE பண்ணுங்க..