News August 8, 2024

ராகுலுக்கு பாக்.,கில் இருந்து வந்த மாம்பழங்கள்: பாஜக

image

பாகிஸ்தான் தூதரகத்தில் இருந்து ராகுல் உள்ளிட்ட 7 எம்பிக்களுக்கு மாம்பழம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. இதயம் இருக்கும் இடத்தில் இருந்து ராகுல், மாம்பழங்களை பெறுகிறார் என பாஜக தலைவர்கள் அவரை விமர்சித்துள்ளனர். உ.பி மாம்பழங்கள் அவருக்கு பிடிக்காது என்றும் கிண்டல் செய்துள்ள பாஜகவினர், 7 பேருக்கு மட்டும் பழம் அனுப்ப வேண்டிய நோக்கம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

Similar News

News December 6, 2025

தென்காசி: என் சாவுக்கு காரணம்., இளம்பெண் கடிதம்!

image

சிவகிரியை சேர்ந்தவர் பிரகாஷ் மனைவி பொன் ஆனந்தி (26). கடையநல்லூர் மருத்துவமனையில் பணியாற்றி வந்த பொன் ஆனந்தி, ஆன்லைன் விளையாட்டில் ரூ.63 ஆயிரம் இழந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ‘ என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் இந்த முடிவை எடுத்துள்ளேன்.’ என அவர் கடிதம் எழுதியதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

News December 6, 2025

தவெகவில் இணைந்தவுடன்.. விஜய் போட்ட உத்தரவு

image

நேற்று தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்தை, தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய விஜய் அறிவுறுத்தியுள்ளார். இதனையடுத்து, நாஞ்சில் பங்கேற்கும் வகையில் மாவட்ட அளவிலான பொதுக்கூட்டங்களை நடத்த தவெக மாவட்ட செயலாளர்கள் முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. பொதுக்கூட்டங்களில் தவெக கொள்கை, விஜய் வெற்றிபெற்றால் மக்களுக்கு என்னென்ன செய்வார், திமுக ஆட்சியில் உள்ள குறைபாடுகள் குறித்து அவர் பேசவிருக்கிறாராம்.

News December 6, 2025

இண்டிகோ மீது நடவடிக்கை எடுப்போம்: அமைச்சர்

image

இண்டிகோ பிரச்னை விரைவில் சீராகும் என விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் தெரிவித்துள்ளார். விமான பணி நேர வரம்பு விதிகளால்தான் இந்த இன்னல்கள் நேர்ந்ததாக கூறப்படுவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், மற்ற விமான நிறுவனங்கள் சரியாகத்தானே இயங்குகிறது என கூறியுள்ளார். மேலும் இதற்கு இண்டிகோ தான் காரணம் என்ற அவர், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.

error: Content is protected !!