News December 29, 2024
தூக்கு தண்டனை காலத்தின் கட்டாயம்: சிபி

மரண தண்டனை காலத்தின் தேவை என சிபி சத்யராஜ் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், திரும்ப திரும்ப குற்றம் செய்பவர்களால் சமுதாயத்திற்கு அவமானம் என்றார். குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டவர்கள் பயமுறுத்தப்படாமல் இருக்க விரைவில் நீதி கிடைக்க வேண்டுமெனவும், துணிச்சலாக புகார் அளித்த மாணவிக்கு சல்யூட் என்றும் பதிவிட்டுள்ளார்.
Similar News
News March 6, 2026
42 பற்களை கொண்ட மனிதன்.. கின்னஸ் உலக சாதனை!

32 பற்களை கொண்டவன் மனிதன் என்றால், இவர் ஒரு அசாத்திய மனிதனே. மலேசியாவை சேர்ந்த பிரதாப் முனியாண்டி(33) என்பவருக்கு மொத்தமாக 42 பற்கள் உள்ளதாம். மேல் வரிசையில் 20 பற்களும், கீழ் வரிசையில் 22 பற்களும் உள்ளதாம். இவரின் அதிசயத்தை ‘அதிக பற்களை கொண்ட நபர்’ என கின்னஸும் அங்கீகரித்துள்ளது. அவரின் போட்டோக்களும் வைரலாகி இருக்கும் நிலையில், மக்களும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.
News March 6, 2026
TN-ல் சினிமா ஒரு மதம் போல மாறிவிட்டது: சீமான்

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா என கேட்கும் அளவுக்கு சாதாரணமாக யாரையும் கொலை செய்யும் அவல நிலை இருப்பதாக சீமான் விமர்சித்துள்ளார். நல்லாட்சி என்பது சொல்லில்தான் உள்ளது, செயலில் இல்லை என்ற அவர், மாநில உரிமையை பறிகொடுத்தவர்களே, மாநில உரிமை பற்றி பேசுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் சினிமா என்பது மதம் போல ஆகிவிட்டதாகவும் அவர் பேசியுள்ளார்.
News March 6, 2026
UPDATE: தமிழக தேர்தல் தேதி.. சற்றுமுன் வெளியானது

தமிழக தேர்தல் தேதி மார்ச் 13-ல் அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக ஏற்கெனவே தகவல் வெளியானது. இந்நிலையில், 10 – 15-க்குள் தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஒரேகட்டமாக தேர்தலை நடத்தவும் ECI திட்டமிட்டுள்ளது. மேலும், மே முதல் வாரத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.


