News October 4, 2025
நுரையீரல் கழிவுகளை நீக்கும் மந்தாரை தேநீர்!

மாசு நிறைந்த காற்று, வாகனப் புகை, சிகரெட் புகை போன்றவை நுரையீரலில் அழுக்காகப் படியும். இந்தக் கழிவுகளை நீக்கி, நுரையீரலை பலப்படுத்தும் ஆற்றல் மந்தாரைக்கு இருப்பதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். மந்தாரை இலை & பூக்கள் (1-2), சீரகம், மிளகு, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை நீரில் கலந்து, 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி, தேன் சேர்த்தால் மந்தாரை டீ ரெடி. இந்த டீயை காலையில் குடிக்கலாம். SHARE IT.
Similar News
News October 4, 2025
இத கண்டிப்பா குழந்தைக்கு சொல்லி கொடுங்க!

குழந்தைகளை குறிவைத்து சைபர் கிரைம் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த விஷயங்களை பிள்ளைகளுக்கு சொல்லி கொடுங்க *தெரியாதவர்களிடம் தகவல்களை பகிரக்கூடாது *தெரியாத வெப்சைட்டின் Link-களை கிளிக் செய்யக்கூடாது *ஆன்லைனில் நடைபெறும் பண குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், பிள்ளைகளின் போனில் Parenting Control ஆப்ஷன் ஆன் செய்து வைத்துக் கொள்ளுங்கள். SHARE IT.
News October 4, 2025
கடல் மாநாட்டுக்கு தயாரான சீமான்

ஆடு, மாடுகளின் மாநாட்டை நடத்தி முடித்த சீமான், அடுத்ததாக என்ன மாநாடு நடத்தப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, அடுத்ததாக தருமபுரியில் மலைகளின் மாநாடு, தூத்துக்குடியில் கடல் மாநாடு மற்றும் தஞ்சையில் தண்ணீர் மாநாடு நடத்த உள்ளதாக சீமான் பதில் அளித்துள்ளார். மேலும் கடல் மாநாடு தொடர்பாக தூத்துக்குடியில் உள்ள கடலுக்கு படகு மூலம் சென்று ஆய்வு செய்தார்.
News October 4, 2025
கரூர் துயரம்: அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்

கரூர் துயரம் குறித்து ஐகோர்ட் கூறியுள்ள கருத்துகள், வழிகாட்டுதல்களின்படி தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஐகோர்ட் அமைத்துள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) விசாரணை மூலம், முழு உண்மையையும் வெளிக்கொண்டு வருவோம் என்று மாநிலத்தின் முதலமைச்சராக மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். அனைத்து மட்டங்களிலும் அரசின் பொறுப்பு உறுதிசெய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.