News October 24, 2024
சல்மானுக்கு ₹5 கோடி கேட்டு மிரட்டல் விடுத்தவர் கைது

சல்மான் கானிடம் ₹5 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த நபரை மும்பை பாேலீஸ் கைது செய்துள்ளது. பிஸ்னோய் கும்பலிடம் இருந்து சல்மானுக்கு அச்சுறுத்தல் உள்ள நிலையில், அண்மையில் ₹5 கோடி கேட்டு போலீசுக்கு குறுந்தகவல் வந்தது. இதுகுறித்து விசாரித்து வந்தபோது, தனது செயலுக்கு மன்னிப்புகோரி அந்த நபர் மீண்டும் செய்தி அனுப்பியிருந்தார். இதனடிப்படையில் விசாரித்து, ஜாம்செட்பூரை சேர்ந்தவரை கைது செய்துள்ளது.
Similar News
News December 14, 2025
3-வது டி20: இந்திய அணி பவுலிங்

தரம்சாலாவில் நடக்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டி20-ல், டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. IND அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அக்சர் படேல், பும்ராவுக்கு பதிலாக ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளனர். முதல் டி20-ல் IND 101 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது டி20-ல் SA 51 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
News December 14, 2025
கீர்த்தனாவுக்கு ஊக்கத்தொகை வழங்குக: பா.ரஞ்சித்

கேரம் உலக சாம்பியன் பட்டம் வென்ற கீர்த்தனாவுக்கு ஊக்கத்தொகை, அரசுப் பணி & வீடு வழங்க வேண்டும் என முதல்வரை பா.ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக, கடந்த ஆண்டு கேரம் சாம்பியன்ஷிப் வென்ற காசிமா, மித்ரா, நாகஜோதி ஆகியோருக்கு மொத்தமாக ₹2 கோடி ஊக்கத்தொகையை CM ஸ்டாலின் வழங்கியிருந்தார். ஆனால், கீர்த்தனாவுக்கு இதுவரை எதுவும் அறிவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.
News December 14, 2025
ஸ்குவாஷ் உலகக் கோப்பை: இந்தியா சாம்பியன்

சென்னையில் நடந்த SDAT ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடரில், மகுடம் சூடி இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது. கலப்பு அணிகள் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியா, ஹாங்காங் மோதின. இதன் ஒற்றையர் போட்டிகளில் ஜோஷ்னா சின்னப்பா, அபய் சிங், அனாஹத் சிங் வெற்றி பெற்றனர். இறுதியாக இந்தியா 3-0 என்ற கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தியது. சாதனை படைத்த இந்திய அணிக்கு வாழ்த்துகள் குவிகின்றன.


