News February 9, 2025
73 முறை கத்தியால் குத்திய நபர்: இவ்வளவு வெறியா?

ஆந்திர தொழிலதிபர் வி.சி.ஜனார்தன் ராவ் (86), தன் சொத்துகளில் சிலவற்றை மகள்களுக்கும், பேரன்களுக்கும் கொடுத்துள்ளார். அதில் அவர் பாரபட்சமாக நடந்துகொண்டதாக கூறி, 2-வது மகளும், அவரது மகன் கீர்த்தி தேஜாவும் ராவ் வீட்டுக்கு சென்று நியாயம் கேட்டனர். அப்போது வாக்குவாதம் பெரிதாக, கீர்த்தி தன் தாத்தாவை 73 முறை கத்தியால் குத்தி கொலை செய்தார். அவரை கைது செய்து போலீஸ் விசாரித்து வருகின்றனர். பணமென்றால்…
Similar News
News March 4, 2026
கச்சா எண்ணெய்: இந்தியாவுக்கு உதவ ரஷ்யா ரெடி

ஹார்முஸ் நீரிணை மூடப்பட்ட நிலையில், இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்ட ரஷ்யா முன்வந்துள்ளது. எண்ணெய் விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டால், இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் அனுப்ப ரஷ்யா தயாராக உள்ளதாகவும், போர் நிலவரத்தை பொறுத்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதனிடையே, இந்தியாவில் 40-45 நாள்களுக்கான கச்சா எண்ணெய் & பெட்ரோலிய பொருள்கள் இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 4, 2026
TN-ல் சாதிவெறி, கலவர அரசியல்.. இயக்குநர் ஆதங்கம்

திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தங்களது அதிகார வெறிக்காக வளர்த்தெடுத்த சாதிவெறியே நாங்குநேரி சம்பவத்திற்கு காரணம் என லெனின் பாரதி விமர்சித்துள்ளார். X பதிவில் அவர், திருப்பரங்குன்றத்தில் இல்லாத தீபத்தூணை வைத்து கலவர அரசியலை RSS செய்கிறது என்றும், வெற்று திரைக்கவர்ச்சி அரசியல் மட்டுமே தவெகவிடம் உள்ளதாகவும் கூறியுள்ளார். TN இன்னும் என்னவெல்லாம் பார்க்கபோகிறதோ எனவும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
News March 4, 2026
வள்ளலார் பொன்மொழிகள்

*பசிபோக்குவதே ஜீவகாருண்யம் *வாக்கு வேறு, மனம் வேறு, செய்கை வேறு என்ற நிலையில் இறைவனை வழிபடாதீர்கள். மூன்றும் ஒன்றிய நிலையில் வழிபடுங்கள் *பல்லாயிரம் சொற்களை உபசாரமாகப் பேசுவதைவிட, முகமலர்ச்சியுடன் ஒருவரைப் பார்த்தாலே நம்மைச் சந்திப்பவர் மகிழ்வார் *நல்லோர் மனதை நடுங்கச் செய்யக் கூடாது. தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தக் கூடாது. நட்புக்கு வஞ்சகம் செய்யக் கூடாது.


