News April 16, 2024

ஆட்டநாயகன் விருது வென்ற டிராவிஸ் ஹெட்

image

பெங்களூருவுக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், ஹைதராபாத் வீரர் டிராவிஸ் ஹெட்டிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அவர், 9 Four, 8 Six என விளாசி அசத்தினார். 41 பந்துகளில் 102 ரன்கள் குவித்த அவர், தனது முதல் ஐபிஎல் சதத்தை பதிவு செய்தார். இதனால் அணியின் ஸ்கோர் 287 ஆக உயர்ந்தது. மேலும், ஹைதராபாத் அணிக்காக அதிவேக சதம் அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

Similar News

News April 29, 2025

அவையை அமளியாக்கிய ‘ஊர்ந்து’.. CM விளக்கம்!

image

காவல்துறை மானிய கோரிக்கைக்கு CM அளித்த பதிலுரையில் இடம்பெற்ற ‘ஊர்ந்து’ என்ற சொல்லை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அதற்கு பதிலளித்த CM ஸ்டாலின், ஊர்ந்தோ தவழ்ந்தோ என, தான் யாரையும் குறிப்பிடவில்லை என விளக்கம் அளித்தார். முன்னதாக, CM ஸ்டாலின் பதிலுரையை எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் புறக்கணித்தார்.

News April 29, 2025

ஆபாசப் படங்கள் தடை…ட்ரம்ப் மனைவி ஆதரவு

image

பழிவாங்கும் நோக்கத்துடன் பதிவேற்றப்படும் ஆபாசப் படங்களுக்கு தடைவிதிக்கும் மசோதாவை நிறைவேற்றுவதில் ட்ரம்ப் உறுதியாக உள்ளார். மசோதாவை, USA காங்கிரஸ் நிறைவேற்றி அதிபரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. இது சட்டமானால், குழந்தைகளின் தனியுரிமை பாதுகாக்கப்படும் என்பதால் ட்ரம்ப் மனைவி மெலானியா ஆதரவளித்துள்ளார். தேநேரம், கருத்துரிமைக்கு எதிரானதாக இது மாறிவிடக்கூடாது என விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.

News April 29, 2025

BREAKING: காலனி என்ற சொல் நீக்கம்: CM ஸ்டாலின்

image

காலனி என்ற சொல் அரசு ஆவணங்கள் மற்றும் பொதுப் புழக்கத்திலிருந்து நீக்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், ஆதிக்கம் மற்றும் தீண்டாமையின் அடையாளமாக உள்ள காலனி என்ற சொல் நீக்கப்படும் என்றார்.

error: Content is protected !!