News September 24, 2025
ஆம்லேட் சாப்பிட்டவர் உயிரிழப்பு… சோகம்!

உணவை அவசர அவரசமாக விழுங்க கூடாது, நன்றாக மென்று சாப்பிட வேண்டும் என்பதற்கு கேரளாவில் நடந்த இச்சம்பவம் ஒரு உதாரணம். விஷாந்தி டி’சோசா என்பவர் சாலையோர கடையில் ஆம்லெட், வாழைப்பழம் வாங்கி அவற்றை வேகவேகமாக விழுங்கியுள்ளார். உணவு தொண்டையில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டதால், சில நிமிடங்களிலேயே உயிரிழந்தார். சாப்பிடும் போது அவசரப்பட வேண்டாம். இந்த பயனுள்ள எச்சரிக்கையை நண்பர்களுக்கு SHARE செய்யலாமே!
Similar News
News September 24, 2025
கேட்பாரற்று கிடக்கும் ₹67,000 கோடி: திருப்பி தர நடவடிக்கை

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ₹67,000 கோடி வைப்பு நிதியை, உரிமையாளர்களிடம் ஒப்படைக்க RBI அறிவுறுத்தியுள்ளது. அடுத்த 3 மாதங்களுக்குள் இது தொடர்பான விழிப்புணர்வை பயனாளர்களுக்கு ஏற்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படாமலோ அல்லது செலுத்தப்படாமலோ இருந்தால், அவை உரிமைக் கோரப்படாத டெபாசிட் என வகைப்படுத்தப்படும்.
News September 24, 2025
அதிமுக EX அமைச்சருடன் CM ஸ்டாலின் சந்திப்பு

MGR அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த HV ஹண்டேவை, CM ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசினார். Dr.ஹண்டே தற்போது பாஜகவில் உள்ள நிலையில், இந்த சந்திப்பு அரசியல் கவனம் ஈர்த்துள்ளது. TN அரசின் திட்டங்களை பாராட்டி ஹண்டே தொடர்ந்து கடிதம் எழுதி வந்ததால், அவரை சந்தித்ததாகவும், 99 வயதிலும் அயராமல் உழைத்து வரும் அவரை சந்தித்தது மகிழ்ச்சி எனவும் CM ஸ்டாலின் தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
News September 24, 2025
தமிழகத்தை பொம்மை CM ஆட்சி செய்கிறார்: EPS

தமிழகத்தை ஒரு பொம்மை CM ஆட்சி செய்வதாக EPS விமர்சித்துள்ளார். இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கி மாநிலத்தை ஆட்சி செய்வதிலும், பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதிலும் ஸ்டாலின் ரோல் மாடலாக திகழ்கிறார் என்றும் அவர் சாடியுள்ளார். மேலும், CM ஸ்டாலின், DCM உதயநிதி தங்களை தாங்களே புகழ்ந்து பேசிக்கொள்கின்றனர். ஆனால் மக்கள் அவர்களை புகழ்வதில்லை என்று EPS பேசினார்.