News April 3, 2025
சாவை தானே தேடிச் சென்றவர் கைது

அந்தமான் நிகோபார் தீவுகளில் வசிக்கும் சென்டினல் பழங்குடிகளைச் சந்திக்க சென்ற USA-வின் மைகாலியோவை போலீசார் கைது செய்துள்ளனர். தடை செய்யப்பட்ட வடக்கு சென்டினல் தீவுக்குச் சென்று, பழங்குடிகளை பார்க்க அவர் முற்பட்டிருக்கிறார். இருப்பினும், பழங்குடிகள் அவரை பார்க்காததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியிருக்கிறார். வெளியாட்கள் வருவதை பார்த்தவுடன் கொல்வதுதான் அப்பழங்குடிகளின் வழக்கம்.
Similar News
News March 24, 2026
திமுகவினரின் லாபத்திற்காக கள்ளுக்குத் தடை: சீமான்

தமிழ்நாட்டை சுற்றியுள்ள அனைத்து மாநிலங்களிலும் கள் விற்கப்படுகிறது; இங்கு மட்டும் ஏன் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று வேலூரில் பரப்புரை மேற்கொண்ட சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக நிர்வாகிகள் நடத்தும் மது ஆலைகளின் லாபம் கெட்டுவிடும் என்பதால்தான் கள்ளுக்கு தடை விதித்துள்ளனர் என சாடிய அவர், அநீதிகளை சகித்து சகித்து அடிமையாகிவிட்டோம், துணிந்து நாதகவிற்கு வாக்களியுங்கள் மாற்றம் உண்டாகும் என்றார்.
News March 24, 2026
BREAKING: அதிமுகவில் இருந்து விலகினார்

EX அமைச்சர் CV சண்முகத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய விழுப்புரம் நகர செயலாளர் பசுபதி, அதிமுகவிலிருந்து விலகியுள்ளார். தேர்தலில் சீட்டு விவகாரத்தில் CV சண்முகம் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், தனது சாதியை சேர்ந்தவர்களுக்கே கட்சி பதவி வழங்குவதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தன்னை போலவே பலர், கட்சியில் இருந்து விலக இருப்பதாக பசுபதி கூறியுள்ளது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
News March 24, 2026
போனில் பேசுறப்போ ‘BG noise’ அதிகமா இருக்கா? சீக்ரெட் டிரிக்

சுத்தி பலர் இருக்கும் கூட்டமான இடங்களில் இருந்து நாம் ஒருவருக்கு போன் செய்தால், எதிர் முனையில் இருப்பவர்களுக்கு நாம் பேசுவதே சரியாக கேட்காது. இந்த இரைச்சலை தவிர்க்க, பல போன் கம்பெனிகள் ஒரு Hidden ஆப்ஷனை கொடுத்துள்ளனர். ➤Settings -> Sound & Vibrations ஆப்ஷனுக்கு செல்லவும். ➤Clear Voice or Clear Call option-ஐ On செய்தால் போதும். Background noise குறைந்துவிடும். அனைவருக்கும் SHARE THIS.


