News August 14, 2025
CM ஸ்டாலினுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

சுதந்திர தினத்தன்று CM ஸ்டாலின் கொடி ஏற்றும் போது, வெடிகுண்டு வெடிக்கும் என காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் மிரட்டல் விடுத்திருந்தார். இதுகுறித்து உடனடியாக தீவிர விசாரணை செய்த போலீசார் செங்கல்பட்டை சேர்ந்த கணேசன் என்பவரை கைது செய்தனர். தொழிலில் நஷ்டம் அடைந்த விரக்தியில், மது போதையில் அவர் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
Similar News
News August 16, 2025
சமூகநீதி பேச திமுகவுக்கு தகுதியில்லை: தமிழிசை

தமிழகத்தில் CM ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றுவது இதுவே கடைசி என்றும், மீண்டும் அவர் முதல்வராக வரமாட்டார் எனவும் தமிழிசை தெரிவித்துள்ளார். தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்தியதை பார்க்கும் போது சமூகநீதி பேச திமுகவுக்கு தகுதியே இல்லை என்றார். மேலும் தான் தென்சென்னையில் போட்டியிட்ட போது 20,000 வாக்குகள் நீக்கப்பட்டதாகவும், அவை அனைத்தும் பாஜகவுக்கான வாக்குகள் என்றும் கூறினார்.
News August 16, 2025
கிருஷ்ண ஜெயந்தியில் இந்த தவறுகளை பண்ணிடாதீங்க!

★வெங்காயம், பூண்டு, மது, உள்ளிட்ட தாமச உணவுகளை கண்டிப்பாக கிருஷ்ண ஜெயந்தி அன்று தவிர்க்க வேண்டும்.
★அன்பையும், ஒற்றுமையையும் வளருங்கள். யாரிடமும் கோபப்பட வேண்டாம்.
★கிருஷ்ணர் நள்ளிரவில் தான் பிறந்தார் என்பதால், அந்த சமயத்தில் தூங்காமல், கண்ணனை வழிபட வேண்டும்.
★கிருஷ்ணருக்கு கண்டிப்பாக கருப்பு நிற பொருள்களை அர்ப்பணிக்க கூடாது.
★துளசி இலையை பறிக்கக் கூடாது.
News August 16, 2025
உக்ரைனில் போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்பு: டிரம்ப்

புடின் உடனான பேச்சுவார்த்தை பயனுள்ளதாக அமைந்ததாக டிரம்ப் தெரிவித்துள்ளார். அலாஸ்காவில் புடினுடனான பேச்சுவார்த்தைக்கு பின் பேட்டியளித்த டிரம்ப், உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து உடன்பாடு எட்டப்படவில்லை என்றும், ஆனால் அது எட்டுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார். விரைவில் இது தொடர்பாக தான் ஜெலன்ஸ்கி மற்றும் ஐரோப்பிய யூனியன் தலைவர்களிடம் பேசவுள்ளதாகவும், இனி முடிவு அவர்கள் கையில் என்றார்.