News January 17, 2025

சயிப் அலி கானை தாக்கியவர் கைது

image

சயிப் அலி கானை கத்தியால் குத்தியவரை போலீசாரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து, அவரை பாந்த்ரா காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வீட்டிற்குள் புகுந்து பணிப்பெண்ணிடம் வாக்குவாதம் செய்த நபரை தடுத்தபோது சயிப் அலி கான் மீது தாக்குதலில் ஈடுபட்ட அவர், கழுத்து, முதுகெலும்பில் கத்தியால் குத்திவிட்டு தப்பியுள்ளார். தற்போது சயிப் அலி கான் ஹாஸ்பிட்டலில் சிகிச்சையில் உள்ளார்.

Similar News

News August 24, 2025

இதுவும் கடந்து போகும்..!

image

பணம் வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்று என்ற போதிலும், சந்தோஷத்தையும், மன நிம்மதியையும் பணத்துடன் தொடர்புபடுத்த வேண்டாம். வாழ்வில் இன்பம் மட்டுமே இருந்தாலும், அதுவும் ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்திவிடும். துன்பம் வரும் போது, துவள வேண்டாம். இதுவும் கடந்து போகும் என்ற மனநிலைக்கு வந்துவிடுங்கள். இன்பமும் துன்பமும் கலந்ததே வாழ்க்கை. இரண்டையும் ஏற்றுக்கொள்ளதான் வேண்டும்.

News August 24, 2025

வங்கி வாடிக்கையாளர்களே அலர்ட்.. SBI அறிவிப்பு

image

ஓராண்டுக்கும் மேலாக பரிவர்த்தனை இல்லாத SBI கணக்குகளை, வங்கிக் கிளைகள், நெட்/ மொபைல் பேங்கிங் மூலம் KYC-ஐ புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நேற்று (ஆக.23) வெளியான நிலையில், அடுத்த ஒரு மாதத்திற்குள் KYC புதுப்பிக்கப்படவில்லை என்றால், ஓராண்டுக்கு மேலாக பரிவர்த்தனை (அ) மினிமம் பேலன்ஸ் இல்லாத வங்கிக் கணக்குகள் எவ்வித முன்னறிவிப்புமின்றி முடக்கப்படும் என SBI தெரிவித்துள்ளது.

News August 24, 2025

உடலை சுத்தமாக்கும் ‘துளசி தேநீர்’

image

ஆயுர்வேதத்தில் ஆன்மாவை தூய்மைப்படுத்தும் மூலிகையாக சொல்லப்படும் ‘துளசி’ உடலின் நச்சுகளை நீக்கக் கூடியது. மேலும், இருமல், மூச்சுப் பிரச்னை உள்ளவர்களுக்கு நிவாரணம் தரும். நன்கு கொதித்த நீரை உலர்ந்த துளசி இலைகள் மீது ஊற்றி, 20-30 நிமிடங்கள் ஊறவிடவும். பின் சூடாக அருந்தலாம். ஒரு நாளைக்கு 3 கப் அருந்தலாம். இதனுடன் இஞ்சி (அ) ஒரு சிட்டிகை மிளகு சேர்த்துக்கொள்ளலாம். SHARE IT!

error: Content is protected !!