News February 2, 2025
திருநங்கைகள் அமைப்பில் இருந்து மம்தா குல்கர்ணி நீக்கம்

விஜய் தயாரிப்பில் 1991இல் வெளியான நண்பர்கள் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் மம்தா குல்கர்ணி. இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் 1990களில் கலக்கிய அவர், அண்மையில் கும்பமேளாவில் துறவறம் பூண்டார். பின்னர் திருநங்கைகளுக்கான அமைப்பில் அவருக்கு மகாமண்டலேஸ்வர் பதவி அளிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் அவரையும், அவரது குருவான லட்சுமி நாராயண் திரிபாதியையும் அதன் தலைவர் நீக்கியுள்ளார்.
Similar News
News March 2, 2026
இன்று பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

மாசிமக திருவிழாவையொட்டி தஞ்சை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை என கலெக்டர் அறிவித்துள்ளார். ஓசூர், சூளகிரி, தேன்கனிகோட்டை, அஞ்செட்டி தாலுகாக்களில் மார்ச் 3-ல் உள்ளூர் விடுமுறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அய்யா வைகுண்டரின் அவதார விழாவையொட்டி, மார்ச் 4-ல் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறையாகும். +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது பொருந்தாது.
News March 2, 2026
‘போர்’ நெதன்யாகுவுடன் PM மோடி பேச்சு

ஈரான் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், நெதன்யாகுவுடன் PM மோடி தொலைபேசியில் உரையாடியுள்ளார். இதில் சமீபத்திய நிகழ்வுகள் குறித்து இந்தியாவின் கவலையை தெரிவித்ததோடு, மக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வலியுறுத்தியதாக தனது X பதிவில் PM மோடி குறிப்பிட்டுள்ளார். மேலும், போர் நடவடிக்கைகளை விரைவில் நிறுத்த வேண்டியதன் அவசியத்தை இந்தியா மீண்டும் அறிவுறுத்தியதாக அவர் கூறியுள்ளார்.
News March 2, 2026
அரையிறுதியில் இந்தியா யாருடன் மோதுகிறது?

T20 WC சூப்பர் 8 சுற்றில் ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி அரையிறுதிக்கு இந்தியா முன்னேறியுள்ளது. இதையடுத்து, 2-வது அரையிறுதியில் இங்கிலாந்தை இந்தியா எதிர்கொள்கிறது. வரும் 5-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. தொடர்ந்து 3-வது முறையாக டி20 WC தொடர்களின் (2022, 2024, 2026) அரையிறுதியில் இங்கிலாந்து, இந்தியா விளையாடுகின்றன. முதல் அரையிறுதியில் SA Vs NZ மோதுகின்றன.


