News March 24, 2025
விடுதியாக மாறிய மம்மூட்டி வீடு.. ஒரு நாள் வாடகை என்ன?

பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி, கொச்சியில் தான் வசித்து வந்த வீட்டில் இருந்து வேறு இடத்திற்கு மாறிவிட்டார். பிரபல நடிகர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள அந்த வீடு, தற்போது சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதியாக மாற்றப்பட்டுள்ளது. 4அறைகள் உள்ள வீட்டின் ஒருநாள் வாடகை ₹75,000. மம்மூட்டி வீட்டின் முன் நின்று ஒரு புகைப்படம் எடுத்துவிட மாட்டோமா? என ஏங்கிய ரசிகர்களுக்கு இப்போது தங்கும் வாய்ப்பே கிடைத்துள்ளது.
Similar News
News December 21, 2025
கரூரில் வசமாக சிக்கிய மூவர்: அதிரடி கைது

லாலாபேட்டை பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக லாலாபேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பதுக்கி வைத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்த வயலூர் பகுதியைச் சேர்ந்த தனம் (57), மேட்டுமகாதானபுரம் பகுதியை சேர்ந்த கண்ணன் (44), மேல தாளியாம்பட்டியைச் சேர்ந்த சம்பூரணம் (48) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
News December 21, 2025
காலை அலாரம் அடிச்ச அப்புறம் தான் எழுந்திருக்குறீங்களா?

பலரும் காலை அலாரம் அடித்த பிறகே, எழுந்து வேக வேகமாக கிளம்புவோம். ஆனால், அந்த காலை அலாரம் இதயப்பிரச்னை இருப்பவர்களுக்கு ஆபத்தானது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். திடீரென அதிக சத்தம் கேட்டு எழுந்தால், Blood Pressure அதிகரிக்கும். இது Cardiovascular அமைப்பில் அழுத்தத்தை ஏற்படுத்தி, இதய பிரச்னைகள் அதிகரிக்குமாம். இதனை, Morning Blood Pressure Surge என்கின்றனர். மெல்லிய இசையை அலாரமாக வைக்கலாம்.
News December 21, 2025
கூட்டணியில் புதிய முடிவு.. CM ஸ்டாலினுக்கு சிக்கல்

திமுக கூட்டணியில் இஸ்லாமியர்களுக்கு 16 தொகுதிகளை ஒதுக்குமாறு CM ஸ்டாலினிடம் வலியுறுத்துவோம் என IUML தேசிய தலைவர் காதர் மொய்தீன் கூறியுள்ளார். இவற்றில் 5 தொகுதிகளை IUML கட்சிக்கு கேட்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, காங்., விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், கூடுதல் சீட்களை கேட்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், இது திமுகவுக்கு புதிய நெருக்கடியை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.


