News January 17, 2025
பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு

பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சுதா கொங்கராவின் உதவி இயக்குநரான கீர்த்தீஸ்வரன் இப்படத்தை இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜி.வி.பிரகாஷின் ‘ரெபல்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மமிதா பைஜு, விஜய்யின் ‘தளபதி 69’ படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
Similar News
News August 24, 2025
ஒன்றரை வயது தொட்டில் குழந்தை விஜய்: KTR

அரசியல் என்பது ஒரு நாள் இரவில் உருவாக்கப்படும் சினிமா கதை அல்ல என்று K.T.ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒன்றரை வயது தொட்டில் குழந்தையாக இருக்கும் விஜய், அதிமுகவின் தலைமை பற்றி பேசுவது கேளிக்கையாக உள்ளதாக சாடியுள்ளார். விஜய்யின் வருகை அதிமுகவுக்கு சவால் அல்ல, அது மேலும் பலம் சேர்க்கும் என்றும் அவர் கூறியுள்ளார். உங்கள் கருத்து என்ன?
News August 24, 2025
இதுவும் கடந்து போகும்..!

பணம் வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்று என்ற போதிலும், சந்தோஷத்தையும், மன நிம்மதியையும் பணத்துடன் தொடர்புபடுத்த வேண்டாம். வாழ்வில் இன்பம் மட்டுமே இருந்தாலும், அதுவும் ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்திவிடும். துன்பம் வரும் போது, துவள வேண்டாம். இதுவும் கடந்து போகும் என்ற மனநிலைக்கு வந்துவிடுங்கள். இன்பமும் துன்பமும் கலந்ததே வாழ்க்கை. இரண்டையும் ஏற்றுக்கொள்ளதான் வேண்டும்.
News August 24, 2025
வங்கி வாடிக்கையாளர்களே அலர்ட்.. SBI அறிவிப்பு

ஓராண்டுக்கும் மேலாக பரிவர்த்தனை இல்லாத SBI கணக்குகளை, வங்கிக் கிளைகள், நெட்/ மொபைல் பேங்கிங் மூலம் KYC-ஐ புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நேற்று (ஆக.23) வெளியான நிலையில், அடுத்த ஒரு மாதத்திற்குள் KYC புதுப்பிக்கப்படவில்லை என்றால், ஓராண்டுக்கு மேலாக பரிவர்த்தனை (அ) மினிமம் பேலன்ஸ் இல்லாத வங்கிக் கணக்குகள் எவ்வித முன்னறிவிப்புமின்றி முடக்கப்படும் என SBI தெரிவித்துள்ளது.