News June 4, 2024

பாஜகவால் எம்.பி பதவி இழந்த மஹுவா மொய்த்ரா வெற்றி!

image

மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாநகர் தொகுதியில் 4,85,079 வாக்குகளைப் பெற்ற மஹுவா மொய்த்ரா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். 4,44,395 வாக்குகள் எடுத்த அமித்ஷாவின் தீவிர விசுவாசியான அம்ரிதா ராயை 40,684 வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வீழ்த்தியுள்ளார். பர்தமான்-துர்காபூர் தொகுதியில் போட்டியிட்ட கீர்த்தி ஆசாத் 1,23,621 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் திலிப் கோஷை வீழ்த்தி, வெற்றி வாகை சூட்டியுள்ளார்.

Similar News

News March 18, 2026

பெரம்பலூரில் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி

image

தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, பெரம்பலூரில் நேற்று (17.3.2026) மாவட்ட எஸ்.பி அனிதா தலைமையில் எல்லை பாதுகாப்பு படை (BSF) வீரர்கள் மற்றும் மாவட்ட காவல்துறையினர் இணைந்து கொடி அணிவகுப்பு (Route March) நடத்தினர். இந்த அணிவகுப்பை மாவட்ட எஸ்.பி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

News March 18, 2026

எந்த வயதில் தத்தெடுத்தாலும் மகப்பேறு விடுப்பு உண்டு : SC

image

3 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தையை தத்தெடுத்தால் மட்டுமே 12 வார கால மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்று கூறும் சட்டப்பிரிவு 60(4)-ஐ SC ரத்து செய்துள்ளது. ஒரு குழந்தை எந்த வயதில் தத்தெடுக்கப்பட்டாலும், அந்தப் புதிய சூழலுடனும் தாயுடனும் ஒன்றிணைவதற்கு கால அவகாசம் தேவை எனவும், தத்தெடுக்கும் குழந்தையின் வயது எவ்வளவாக இருந்தாலும், தாய்க்கு மகப்பேறு விடுப்புக்கு உரிமை உண்டு என்றும் தீர்ப்பளித்துள்ளது.

News March 18, 2026

கடந்த ஓராண்டில் மட்டும் 1,408 கொலைகள் நடந்துள்ளது: EPS

image

குற்றங்களை விழிப்புடன் கண்காணிக்க வேண்டிய உளவுத்துறை ஸ்டாலின் குடும்பத்தின் ஏவல் துறையாக இருக்கிறது என EPS குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னையில் பேசிய அவர், ஆம்ஸ்ட்ராங்க் படுகொலை முதல் காங்கிரஸின் நெல்லை மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெட்டி எரித்து கொலை செய்யப்பட்டது வரை குற்றவாளிகளை இன்னும் கண்டுபிடிக்கவில்லை எனவும், TN-ல் கடந்த ஓராண்டில் மட்டும் 1,408 கொலைகள் நடந்துள்ளது என்றும் விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!