News June 6, 2024
கருத்துக்கணிப்பு மூலம் முறைகேடு: TMC

தேர்தல் கருத்துக்கணிப்புகள் மூலம் பங்குச்சந்தையில் முறைகேடு நடந்திருப்பதாக, திரிணாமுல் காங்., எம்.பி சாகேத் கோகலே, செபி தலைவர் மதாபி பூரி புச்சிற்கு கடிதம் எழுதியுள்ளார். பாஜக அமோக வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பு வெளியான நிலையில், பங்குச்சந்தை வரலாற்று உச்சத்தை பதிவு செய்தது. ஆனால், முடிவுகள் மாறியதால் சந்தை பெருமளவு சரிந்தது. இதன் பின்னணியில் பாஜக இருக்கிறதா? என அவர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
Similar News
News August 18, 2025
நான் இறந்துவிட்டேன்.. கல்லூரி மாணவர் விபரீத முடிவு

‘நீங்கள் இதை படிக்கிறீர்கள் என்றால், நான் இறந்துவிட்டேன் என அர்த்தம். எனது மரணம் என் சொந்த முடிவு. ஓராண்டாக திட்டமிட்டு இந்த முடிவை எடுத்துள்ளேன்.’ நொய்டாவில் தற்கொலை செய்த மாணவர் சிவம் டே(24) எழுதிய வரிகள் இவை. மாணவன் 2 ஆண்டுகளாக கல்லூரிக்கு வரவில்லை எனவும், அதனை கல்லூரி நிர்வாகம் தங்களுக்கு தெரிவிக்கவில்லை என்றும் அவரது பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.
News August 18, 2025
இந்த நான்கு பேரில் யாரை சேர்க்கலாம்?

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி தேர்வு சூடுபிடித்துள்ளது. அணி தேர்வு மும்முரமாக நடைபெற்று வரும் சூழலில், 15 பேர் கொண்ட அணியில், இன்னும் ஒரு வீரரை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியாமல் தேர்வு குழு திணறி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. அந்த இடத்திற்கான பரிசீலனையில் ஸ்ரேயஸ் ஐயர், ரிங்கு சிங், ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் உள்ளனராம். நீங்க சொல்லுங்க இவர்களில் யாரை டீமில் சேர்க்கலாம்?
News August 18, 2025
நான் குடிப்பேன்.. ஒப்புக் கொண்ட தனுஷ் பட ஹீரோயின்

தனக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக சம்யுக்தா மேனன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், தினமும் குடிப்பதில்லை, மன அழுத்தம் (அ) பதட்டம் ஏற்படும்போது மட்டுமே குடிப்பதாகவும் காரணம் கூறியுள்ளார். தனுஷின் ‘வாத்தி’ படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமான அவர், விஜய் சேதுபதியுடன் ஒரு படம், Benz படங்களில் நடித்து வருகிறார்.