News October 1, 2025
மல்லிகார்ஜுன கார்கே ஹாஸ்பிடலில் அனுமதி

உடல்நலக்குறைவு காரணமாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெங்களூருவில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர் காய்ச்சல் காரணமாக கார்கே ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. டாக்டர்கள் அவரை தீவிரமாக கண்காணித்து பரிசோதித்து வருகின்றனர். அவரது உடல்நிலை குறித்து விரிவான அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 17, 2026
ஸ்டாலினுக்கு அழுத்தம் கொடுக்கும் கூட்டணி கட்சிகள்!

தேமுதிகவுக்கு எத்தனை சீட்டு என்பதை சொன்ன பிறகு தங்களை அழையுங்கள் என திமுக தலைமைக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் கூறியுள்ளனவாம். இதனால், திமுக தொகுதிப் பங்கீட்டு குழுவினர் கடும் அதிர்ச்சியை அடைந்துள்ளனர். ஏற்கெனவே காங்கிரஸுக்கு கூடுதல் சீட்டு ஒதுக்கியதால் தங்களுக்கும் கூடுதல் சீட்டுகள் வேண்டும் என CPI, CPM, VCK, ஸ்டாலினுக்கு கடும் நெருக்கடியை கொடுத்து வருவதால் தொகுதி உடன்பாட்டில் இழுபறி நீடிக்கிறது.
News March 17, 2026
FLASH: காருடன் எரிந்த நிலையில் கிடந்த 4 சடலங்கள்!

நெல்லை, திசையன்விளை பகுதியில் உள்ள பனங்காட்டில் சொகுசு கார் ஒன்றில் எரிந்த நிலையில், 4 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடல்களை கைப்பற்றிய போலீசார் மோப்ப நாய்கள், தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் விசாரணையில் இறங்கியுள்ளனர். நள்ளிரவில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
News March 17, 2026
தவெகவுடன் கூட்டணியா? நயினார் மழுப்பல்

அதிமுக கூட்டணியில் தவெக இணையவுள்ளதாக வெளியாகும் தகவலே தமிழகத்தின் தற்போதைய ஹாட் டாபிக். இதனை தவெகவும், EPS-ம் மறுத்துள்ள நிலையில், இதுபற்றி தனக்கு தெரியாது என நயினார் நாகேந்திரன் மழுப்பலாக பதிலளித்துள்ளார். இதனால் NDA உடன் மறைமுக பேச்சுவார்த்தையில் இப்போதும் தவெக உள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். இருப்பினும், இதுபற்றி விஜய் கூறினால் மட்டுமே தெளிவு கிடைக்கும் என கூறப்படுகிறது.


