News May 12, 2024

மல்லிகார்ஜுன கார்கே வந்த ஹெலிகாப்டரில் சோதனை

image

காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேர்தல் பிரசாரத்துக்காக வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் ஆணைய அதிகாரிகள், போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். பிகார் மாநிலம் சமஸ்திபூருக்கு அவர் தேர்தல் பிரசாரத்துக்காக ஹெலிகாப்டரில் வந்தார். அப்போது அந்த ஹெலிகாப்டரில் திடீரென சோதனை நடத்தப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் பிகார் மாநில செய்தித் தொடர்பாளர் ராஜேஷ் ரத்தோர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 10, 2026

பாகிஸ்தானின் U Turn.. ₹1500 கோடி

image

IND-க்கு எதிரான போட்டியை <<19097730>>PAK <<>>புறக்கணித்திருந்தால், ICC உள்ளிட்ட உலகளாவிய ஒளிபரப்பாளர்களுக்கு ₹1,500 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும். போட்டி ரத்தாகி இருந்தால் ஹாட்ஸ்டாருக்கும் ICC பெரும் இழப்பீடு வழங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும். ஹாட்ஸ்டாருக்கு, 10 வினாடி விளம்பரத்திற்கு ₹25- 40 லட்சம் வீதம் அந்த ஒரு நாளில் மட்டும் ₹200-300 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என தகவல் வெளிவந்துள்ளது.

News February 10, 2026

இண்டியா கூட்டணியில் பிளவா? பார்லி.,யில் நடந்த சம்பவம்

image

லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதில் இண்டியா கூட்டணியில் கருத்து பிளவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இண்டியா கூட்டணி கொண்டுவந்த இத்தீர்மானத்தை ஆதரிக்க TMC கட்சி மட்டும் மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், மீதமுள்ள எதிர்க்கட்சி MP.க்கள் இத்தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளதால், இது விரைவில் பொதுச் செயலாளரிடம் ஒப்படைக்கப்படும் என்கின்றனர்.

News February 10, 2026

பாமகவின் குழப்பத்துக்கு திமுகவே காரணம்: அன்புமணி

image

ராமதாஸை சுற்றியுள்ள துரோகிகளில் முக்கியமானவர் ஜி.கே. மணி என ராயபுரத்தில் நடைபெற்ற இளைஞர் அணி கூட்டத்தில் அன்புமணி விமர்சித்துள்ளார். பாமகவில் நடக்கும் குழப்பங்களுக்கு திமுகதான் காரணம் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். திரும்பிய திசையெல்லாம் திமுக ஆட்சிக்கு எதிராக போராட்டங்கள் நடப்பதாகவும், இளைஞர்கள் புரட்சி செய்தால் ஆட்சி மாற்றம் ஏற்படும் எனவும் அவர் கூட்டத்தில் பேசியுள்ளார்.

error: Content is protected !!