News September 1, 2025
வைகோவுக்கு மல்லை சத்யா கடிதம்

வைகோவின் கடிதத்திற்கு மல்லை சத்யா பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், கட்சியில் இருந்து நீக்கும் முடிவு எடுத்துவிட்டு தற்காலிக நீக்கம், பொறுப்பு நீக்கம் என இரு முரண்பாடான கடிதங்களை அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், துரை வைகோவை பொறுப்புக்கு கொண்டு வந்ததை வைகோ ஆதரித்ததாகவும், பல வழக்குகளில் வைகோவுக்கு துணை நின்ற தனக்கு துரோகி பட்டமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். உங்கள் கருத்து என்ன?
Similar News
News September 4, 2025
மூலிகை: எடை குறைப்புக்கு உதவும் திப்பிலி!

சித்த மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி,
➤திப்பிலியின் பாக்டீரியா எதிர்ப்பு, வலி நிவாரணி பண்புகள் பல்வலி & வாய் பிரச்னைகளுக்கு நிவாரணியாக உள்ளது.
➤திப்பிலியில் பைபர் உள்ளதால், கொழுப்பைக் குறைக்க உதவும்.
➤திப்பிலி பழங்களிலிருந்து பெறப்படும் எண்ணெய் தூக்கமின்மை பிரச்னையை விரட்ட உதவுகிறது.
➤திப்பிலியின் வேரிலிருந்து கிடைக்கும் சாறு, சிறுநீரக பிரச்னைக்கு சிறந்த மருந்தாகும். SHARE IT.
News September 4, 2025
நாய்களுடனான உறவை சிதைக்க கூடாது: மிஷ்கின்

தெரு நாய்கள் விவகாரத்தில் 2 பக்கத்தின் பாதிப்புகளை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார். உயிர்வதை கொடுமையானது, அதே சமயம் நாய்கள் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட வேண்டும் எனவும் கூறியுள்ளார். நாய்களுக்கும் மனிதர்களுக்குமான உறவு, உணர்வு ரீதியான என்றும், அதை சிதைத்துவிடாமல் திட்டமிடல் இருந்தால் சிறப்பாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
News September 4, 2025
தமிழ்நாட்டின் ஆற்றலை எடுத்துரைத்த ஸ்டாலின்

முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சென்றுள்ள CM ஸ்டாலின், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் கேதரின்வெஸ்டை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இதில் கல்வி, ஆராய்ச்சி, பசுமை பொருளாதாரம் உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டதாக அவர் X தளத்தில் குறிப்பிட்டுள்ளார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தகவல் தொழில் நுட்பம், உற்பத்தி உள்ளிட்டவையில், தமிழ்நாடு வலுவாக உள்ளது குறித்து எடுத்துரைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.