News April 20, 2025
வரிசையின் ஓரத்தில் அமர்ந்த மல்லை சத்யா..

மதிமுக முதன்மை செயலாளர் பதவியில் இருந்து துரை வைகோ விலகிய நிலையில், நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்க வந்த துரை வைகோ மேடையில் அமர வைக்கப்பட்டார். மல்லை சத்யா மேடையின் ஓரத்தில் இருந்த சேரில் அமர்ந்தார். கூட்டத்தில் TN கவர்னர் ஆர்.என்.ரவியை பதவியில் இருந்து நீக்கக்கோருவது உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கவர்னரை கண்டித்து, ஏப்.26-ல் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவெடுக்கப்பட்டது.
Similar News
News December 7, 2025
‘அப்பா SORRY.. நான் சாகப் போகிறேன்’

‘அப்பா, என்னை மன்னித்துவிடுங்கள். இனிமேல் என்னால் தாங்க முடியாது. என் சாவுக்கு வேறு யாரும் காரணமில்லை, நான் மட்டுமே பொறுப்பு’. ம.பி., போபாலில் அக்கவுண்டண்டாக பணியாற்றி வந்த சுஜாதாவின்(27) கடைசி வரிகள் இவை. தீராத நோய் பாதிப்பில் இருந்த அவர், தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டது பெரும் சோகம். இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது. தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்பதை உணருங்கள் நண்பர்களே!
News December 7, 2025
₹1,000 கோடிக்கு அதிபதியா தோனி?

9 மாதம் விவசாயம், 3 மாதம் விளையாட்டு என்று தோனியை பற்றி சில மீம்ஸ்களில் பார்த்திருப்போம். விளையாட்டை தாண்டி, பல்வேறு தொழில்களில் தோனி முதலீடு செய்துள்ளார். இதன் இன்றைய மதிப்பு ₹1,000 கோடியை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. CARS24, 7InkBrews, EMotorad, Khatabook, Seven, Mahi Racing போன்ற பிராண்ட்களிலும், ஹோட்டல் உள்ளிட்டவைகளிலும் அவர் முதலீடு செய்துள்ளார். பிஸ்னஸிலும் தோனி கேப்டன் தான் போல.
News December 7, 2025
குழந்தைகளுக்கு ஆபத்து.. இதை செய்யவே கூடாது!

குழந்தை பிறந்த ஒருசில வாரங்கள் வரை அவர்களுக்கு தொப்புள் கொடியின் ரணம் ஆறாமல் இருக்கும். அதன்மூலம் அவர்களுக்கு தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. எனவே தொப்புளை ஈரமாக வைத்திருக்காதீர்கள். டயப்பர் மாட்டும்போது தொப்புள் மீது உரசாமல் பார்த்துக்கொள்ளுங்கள் தொப்புள் கொடி சிவந்து போய் இருந்தாலோ, துர்நாற்றம் வீசினாலோ அலட்சியம் வேண்டாம். உடனடியான டாக்டரை அணுகுங்கள். SHARE.


