News November 29, 2024
மலேசிய தொழிலதிபர் அனந்தகிருஷ்ணன் காலமானார்

2ஜி ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மேக்சிஸ் நிறுவன உரிமையாளரும், மலேசியவாழ் தமிழ் தொழிலதிபருமான அனந்தகிருஷ்ணன் (86) காலமானார். மலேசியாவின் மிகப்பெரும் தொலைபேசி நிறுவனமான மேக்சிஸ், ஆஸ்ட்ரோ டிவி குழுமம் அவருக்கு சொந்தமானதாகும். அந்நாட்டின் 4-வது பெரிய கோடீஸ்வரரான இவர், மலேசிய முன்னாள் PM மகாதீருக்கு நெருக்கமானவர். மலேசியாவின் பிரபல Petronas Towers கட்டும் ஆலோசனையை அளித்தவரும் இவரே.
Similar News
News August 23, 2025
மாநில அரசுக்கு தொல்லை கொடுக்கும் மத்திய அரசு: CM

தமிழ்நாட்டின் அரசியலே சமூகநீதி அரசியல்தான்; வேறு எந்த அரசியலும் எடுபடாது என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து தொல்லை கொடுக்கிறது என்றும், குறுகிய எண்ணத்தோடு செயல்படும் மத்திய அரசு, மாநிலங்களுக்கு உரிய நிதிப்பங்கை அளிப்பதில்லை என குற்றஞ்சாட்டினார். மேலும், கட்சி சாராத நடுநிலையானவர்களை கவர்னராக நியமிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
News August 23, 2025
இந்த தங்கத்தின் விலை வெறும் ₹3,550

24 காரட் தங்கம் என்பது வேறு எந்த உலோகங்களும் சேர்க்காத 99.9 தூய்மையான தங்கமாகும். அதுவே, 9 காரட் தங்கத்தில் 37.5% மட்டுமே தூய்மையான தங்கமும், மீதமுள்ள 62.5% செம்பு, வெள்ளி, Zinc போன்ற உலோகங்கள் கலக்கப்பட்டிருக்கும். உதாரணத்திற்கு 1,000 கிராம் 9 கேரட் தங்கத்தில் 375 கிராம் மட்டுமே சுத்தமான தங்கம் சேர்க்கப்பட்டிருக்கும். இந்தியாவில் இதன் ஒரு கிராமின் விலை ₹3,550 ஆகும்.
News August 23, 2025
Hero அவதாரம் எடுத்த இயக்குநர் அபிஷன்..Back Story இதான்!

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்தை கமிட் செய்ய பல தயாரிப்பாளர்கள் வலை
வீசிக்கொண்டிருந்த நிலையில், அவரை
லாவகமாகத் தூக்கிய சௌந்தர்யா ரஜினி, அபிஷன் சொன்ன கதையைக் கேட்டவுடன் ‘இந்தக் கதைக்கு நீங்கதான் ஹீரோ என்றாராம். மேலும், யார்கிட்டயும் கதையை சொல்லவேண்டாம்’ என்று ஷாக் கொடுத்திருக்கிறார். இதனையடுத்து சீக்ரெட்டாக பூஜை போடப்பட்டு படப்பிடிப்பும் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.