News December 29, 2024

பலத்த அடி வாங்கிய மலையாள திரைத்துறை

image

2024இல் மலையாள சினிமாவுக்கு ₹700 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. கேரளாவில் இந்த ஆண்டு வெளியான 199 திரைப்படங்களில், 26 திரைப்படங்களுக்கு மட்டுமே ரசிகர்களின் வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படங்களை தயாரிக்க ஒட்டுமொத்தமாக ₹1,000 கோடி செலவான நிலையில், வெறும் ₹350 கோடிதான் லாபம் ஈட்டியுள்ளன. உங்களை கவர்ந்த மலையாள படத்தை கமெண்டில் குறிப்பிடுங்கள்.

Similar News

News March 27, 2026

விழுப்புரம்: திருநங்கைகள் தேர்தல் விழிப்புணர்வு

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் முன்னிட்டு சமூக நலத்துறை சார்பில் 100% வாக்களிப்போம் என மெஹந்தி மூலம் திருநங்கை கைகளில் எழுதி மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் இன்று(மார்ச் 27) தொடக்கி வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதில் ஏராளமான திருநங்கைகள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News March 27, 2026

இந்தியாவுக்கு பக்கத்தில் இன்னொரு போர் வெடித்தது

image

ரம்ஜானை முன்னிட்டு ஆப்​கானிஸ்​தானும், பாகிஸ்தானும் போரை தற்காலிகமாக நிறுத்திவைத்திருந்தது. இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததையடுத்​து, இரு நாடு​களுக்​கு இடையே மீண்​டும் மோதல் வெடித்​துள்​ளது. ஆப்​கனின் எல்லையில் PAK குண்டுகளை வீசியதில் இரு​வர் உயிரிழந்ததோடு, 8 அப்பாவி மக்கள் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ஆப்கன்தான் முதலில் தாக்குதலை தொடங்கியதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டுகிறது.

News March 27, 2026

புதிய கூட்டணி அமைக்கிறார் வேல்முருகன்

image

50-க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட கட்சிகள் தவாக உடன் இணைய தயாராக உள்ளதாக வேல்முருகன் கூறியுள்ளார். அனைவரும் ஒன்று கூடி, முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளதாக கூறிய அவர், எதிர்காலத்தில் நாதக உடன் கூட்டணி வைப்பது குறித்து சிந்திக்கலாம் என்றார். மேலும், திமுக, அதிமுக, பாஜகவால் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற மனநிலை சிறு கட்சிகளிடையே நிலவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!