News September 25, 2025

‘AK65’ அஜித்துடன் இணையும் மலையாள இயக்குநர்

image

மலையாள இயக்குநர் ஹனீப் அடேனியுடன் அஜித் இணைந்து பணியாற்றலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ரேஸிங்கில் கவனம் செலுத்தி வரும் அஜித், அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில், ஹனீப் அடேனி, அஜித்திடம் கதை சொல்லியிருப்பதாகவும், AK65 படத்தை அவர் இயக்கலாம் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர் ‘மார்கோ’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News September 25, 2025

5-வது நாளாக தொடர் சரிவு.. முதலீட்டாளர்கள் கலக்கம்

image

இந்தியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 5-வது நாளாக சரிவுடன் நிறைவடைந்துள்ளன. இன்று சென்செக்ஸ் 555 புள்ளிகள் சரிந்து 81,159 புள்ளிகளிலும், நிஃப்டி 166 புள்ளிகள் சரிந்து 24,890 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. ICICI, HDFC, Bajaj Finance நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவை கண்டுள்ளன. அதேநேரம் Axis Bank, Bajaj Auto, Hero உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சற்று உயர்ந்துள்ளன.

News September 25, 2025

சிட்னி தண்டர் அணியுடன் அஸ்வின் ஒப்பந்தம்

image

பிக்பாஷ் தொடரில் சிட்னி தண்டர் அணியுடன் அஸ்வின் ஒப்பந்தம் செய்துள்ளார். ஐபிஎல்-ல் இருந்து ஓய்வை அறிவித்த அவர், டி20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என தெரிவித்திருந்தார். சிட்னி தண்டர் அணிக்காக அஸ்வின் 2 சீசனில் விளையாடுவார் என்றும் நடப்பு சீசனில் 4 போட்டிகளில் மட்டுமே ஆடுவார் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சிட்னி தண்டர் அணிக்கு விளையாட ஆவலுடன் இருப்பதாக அஸ்வின் கூறியுள்ளார்.

News September 25, 2025

சென்னை வந்தடைந்தார் ரேவந்த் ரெட்டி

image

தமிழக அரசு சார்பில் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற நிகழ்ச்சி இன்னும் சற்று நேரத்தில் சென்னையில் துவங்குகிறது. இந்நிலையில், இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக தெலங்கானா CM ரேவந்த் ரெட்டி சென்னை ஏர்போர்ட் வந்தடைந்தார். அப்போது அவரை அமைச்சர் TRB ராஜா வரவேற்றார். தொடர்ந்து, இருவரும் விழா நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு செல்கின்றனர்.

error: Content is protected !!