News April 10, 2024

மலையாள நடிகர் சுஜித் ராஜேந்திரன் காலமானார்

image

மலையாள நடிகர் சுஜித் ராஜேந்திரன் சாலை விபத்தில் சிக்கி கடந்த சில நாள்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். 2018-ம் ஆண்டு வெளிவந்த ‘கினாவல்லி’ படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமான இவர், சன்னி லியோன் நடித்த மாரத்தான் மற்றும் ரங்கீலா உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அவரது மறைவிற்கு திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Similar News

News March 19, 2026

அண்ணன் சீர் சொந்த பணத்தில் கொடுங்கள்: சீமான்

image

நாதக தேர்தல் அறிக்கை வெளியீட்டின்போது விஜய்யை சீமான் விமர்சித்து பேசியுள்ளார். என் தம்பி அறிவித்த இலவசங்களுக்கே மாதம் ₹1 லட்சம் கோடி தேவைப்படுகிறது. இப்பணத்தை எங்கிருந்து கொடுப்பீர்கள் என கேள்வி எழுப்பினார். அண்ணன் சீர், மாமன் சீர் என அனைத்தையும் சொந்த பணத்தில் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். 1 பவுன் தங்கம், பட்டு சேலை அடங்கிய அண்ணன் சீர் திட்டத்தை விஜய் வாக்குறுதியாக அளித்துள்ளார்.

News March 19, 2026

இனி பிரச்னை இல்லை.. வந்தாச்சு GAS ATM!

image

ஹரியானாவின் குருகிராமில் BPCL நிறுவனம், GAS ATM-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. கேஸ் கனெக்‌ஷனில் உள்ள போன் நம்பர் கொடுத்து, பணம் செலுத்தி, காலி சிலிண்டரை கொடுத்தால் புது சிலிண்டர் கிடைக்கிறது. வழக்கமாக கிடைக்கும் 30 கிலோ சிலிண்டர்கள் இங்கு கிடைப்பதில்லை. மாறாக, 15 கிலோ மட்டுமே எடை கொண்ட Fiber சிலிண்டர்கள் தான் கிடைக்குமாம். அதனால் தூக்கிட்டு போவதும் ஈசி. நம்மூரிலும் வந்தா நல்லா இருக்கும்ல?

News March 19, 2026

பள்ளிகளுக்கு கூடுதல் விடுமுறை.. மாணவர்கள் HAPPY

image

தேர்தல் காரணமாக பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.24 வரை முழு ஆண்டு தேர்வுகள் நடத்த முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஏப்.23-ல் தேர்தல் நடைபெற இருப்பதால், முன்கூட்டியே (ஏப்.17-க்குள்) முழு ஆண்டுத் தேர்வுகளை முடிக்க தற்போது ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறதாம். இதனால், மாணவர்களுக்கு மேலும் ஒரு வாரம் கோடை விடுமுறை கிடைக்கும். SHARE IT

error: Content is protected !!