News October 10, 2025
மனதை திருடும் மாளவிகா

மாளவிகா மோகனன், மாஸ்டர் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். அழகு, கம்பீரம் என ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்துவிட்டார். அழகு என்றால் தோற்றம் மட்டும் அல்ல, அது தன்னம்பிக்கையோடு வெளிப்படும் ஒளி என்பதற்கு உதாரணமாக உள்ளவர் மாளவிகா. இவர், இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஸ், ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. உங்களுக்கு பிடிச்சிருந்தா, லைக் போடுங்க.
Similar News
News October 10, 2025
கடலூர்: தாய் திட்டியதால் மகன் தற்கொலை

காட்டுமன்னார்கோயில் அடுத்த பழஞ்சநல்லூரை சேர்ந்தவர் அறிவழகன் (25). இவரது மனைவி அக்ஸில்லா மேரி (24) தற்போது 3 மாத கர்ப்பமாக இருப்பதால், தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் அறிவழகனுக்கும், அவரது அம்மா மதுமதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், மனமுடைந்த அறிவழகன் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
News October 10, 2025
புத்துணர்ச்சிக்கு காலையில் இந்த மூலிகை தேநீர் குடிங்க!

தேநீர் பிரியரா நீங்கள்? அப்படியென்றால் ஆவாரம்பூ தேநீர் பருகிப் பாருங்கள். உடல் ஆரோக்கியத்தை பெருக்கும். ஆவாரம் பூ பொடி, கருப்பட்டி, ஏலக்காய், மிளகு சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளுங்கள். அடுப்பில் வாணலியை வைத்து தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் இஞ்சி, ஆவாரம் பொடி கலவையை சேர்த்து கொதிக்கவிடவும். பிறகு வடிகட்டி குடித்தால் உடல் புத்துணர்ச்சியோடு இருக்கும். SHARE IT.
News October 10, 2025
டிரம்ப்பை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்க கண்டிஷன்

நீண்ட தூரம் சென்று தாக்கும் Tomahawk ஏவுகணைகளை வழங்கினால், அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப்பை பரிந்துரைக்க தயார் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். அதேபோல், ரஷ்யாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த உதவ வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக, பாகிஸ்தானும் டிரம்ப்பை நோபல் பரிசுக்கு பரிந்துரைத்தது. இன்று மாலை அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.