News May 1, 2024
ரசிகரின் கேள்வியால் கோபமான மாளவிகா

ரசிகரின் கேள்வி ஒன்றுக்கு நடிகை மாளவிகா மோகனன் காட்டமாக பதிலளித்துள்ளார். சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் மாளவிகா உரையாடியபோது, ரசிகை ஒருவர் நீங்கள் எப்போது நடிப்பு பயிற்சிக்கு செல்வீர்கள் என்று கேள்வி எழுப்பினார். ஏதாவது ஒரு துறையில் நல்ல பொறுப்பில் நீங்கள் வேலைக்கு சென்ற பிறகு இந்த கேள்விக்கு பதிலளிப்பதாக அவர் ஆவேசமாகத் தெரிவித்தார். இதை தொடர்ந்து அந்த கலந்துரையாடலை அவர் முடித்துக்கொண்டார்.
Similar News
News August 25, 2025
லியோ OST ரிலீஸ்.. அனிருத் அப்டேட்

‘ஜனநாயகன்’ பட பாடல்கள் சூப்பராக வந்துள்ளதாக அனிருத் தெரிவித்துள்ளார். ‘மதராஸி’ பட விழாவில் பேசிய அவர், ஜனநாயகன் விஜய்யின் கடைசி படம் என கூறுவதால் அவரை மிஸ் செய்வதாகவும் கூறியுள்ளார். ‘லியோ’ படத்தின் OST-யில் உள்ள 2 டிராக்குகள் இன்னும் ரிலீஸ் செய்யவில்லை என விஜய் ரசிகர்களுக்கு அப்டேட் மேல் அப்டேட் கொடுத்துள்ளார். கத்தி, மாஸ்டர், பீஸ்ட், லியோ வரிசையில் ஜனநாயகன் மியூசிக் மாஸ் காட்டுமா?
News August 25, 2025
விஜய் மீது மிக அசிங்கமான தாக்குதல்.. கேட்கவே காது கூசுது

ஸ்டாலினை ‘அங்கிள்’ எனக் கூறியதற்கு பதிலடி கொடுப்பதாக நினைத்து, விஜய்யை நடிகைகளுடன் இணைத்து பேசி, திமுக MLA கே.பி.சங்கர் அநாகரிகமாக விமர்சித்துள்ளார். விஜய்க்கு த்ரிஷா கூட போலாமா, கீர்த்தி சுரேஷ் கூட போலாமா என்றுதான் தெரியும். மக்களின் கஷ்ட நஷ்டங்கள் எதுவும் தெரியாது; ஜெயலலிதா போல் ஸ்டாலின் இருந்திருந்தால், துணியை உருவி ஓட விட்டிருப்பார் என்று மோசமாக பேசியுள்ளார்.
News August 25, 2025
வெற்றிக்கு இதுவே தாரக மந்திரம்!

உழைக்காமல் வெற்றி பெற்றவர் யாரும் இல்லை. விரும்பிய துறையை தேர்ந்தெடுத்து, அதில் உள்ள ஒவ்வொரு விஷயத்தையும் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டும்போது கடிகாரத்தில் நேரம் பார்க்கத் தோன்றாது. அந்த வேலை சுமையாக இல்லாமல் சுகமான அனுபவமாகவே இருக்கும். வெற்றி பெற்று விட எண்ணம் இருப்பது போல, தோல்விக்கு ஒரு போதும் பயந்து விட கூடாது. பழசு தான் ஆனாலும் அதுவே நிதர்சனம். தோல்வி தான் வெற்றிக்கு முதல்படி.