News February 16, 2025
மக்கள் நீதி மய்யத்துக்கு வயது 8!

கமல்ஹாசனின் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சி, பிப்.21, 2018இல் தொடங்கப்பட்டது. 8வது ஆண்டுக்குள் அடியெடுத்து வைப்பதை வருகிற பிப்.21ஆம் தேதி விமர்சையாக கொண்டாடவுள்ளதாக கட்சி அறிவித்துள்ளது. அந்த தினத்தில் கமல்ஹாசன், தலைமை அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்து எழுச்சி உரையாற்றுகிறார். திமுக சார்பில் ராஜ்ய சபா MPஆக கமல்ஹாசன் நியமிக்கப்படுவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.
Similar News
News September 12, 2025
வடசென்னை யூனிவர்சில் சாய் பல்லவி?

STR- வெற்றிமாறன் படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அப்படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளதாக தயாரிப்பாளர் தாணு அறிவித்துவிட்டார். அப்படத்தின் வடசென்னை யூனிவர்சில் உருவாகும் இந்த படத்தில் STR-க்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. ஏற்கெனவே, வெற்றிமாறன் இயக்கத்தில் பாவக்கதைகள் வெப் தொடரில் சாய் பல்லவி நடித்திருந்தார். STR- சாய் பல்லவி காம்போ எப்படி இருக்கும்?
News September 12, 2025
BREAKING: புதிதாக தொடங்குகிறார் அண்ணாமலை

இளைஞர்களின் தொழில் ஆர்வத்தை ஊக்குவித்து அவர்களுக்கு உதவும் வகையில் முதலீட்டு நிறுவனம் தொடங்கும் பணி ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். <<17687290>>விவசாய நிலம் வாங்கியது<<>> தொடர்பான சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ள அவர், மத்திய அரசின் PMEGP திட்டத்தில் பால் பண்ணை அமைக்க கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளதாகவும் கூறியுள்ளார். சர்ச்சைகளுக்கு எல்லாம் அடுத்தாண்டு தனது IT பதில் சொல்லும் என்றார்.
News September 12, 2025
சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்

திருமண மோசடி வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் தொடர்ந்த வழக்கில், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சீமான் மன்னிப்பு மனுவை சமர்ப்பிக்காவிட்டால், வழக்கை ரத்து செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடித்துக் கொண்டிருந்த போதே, திருமண ஆசை காட்டி ஏமாற்றியவர், பொதுவெளியில் அவதூறாக பேசி வருவதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் நடிகை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.