News April 15, 2024
அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்கள் (3)

1980 மக்களவைத் தேர்தலில் மகாராஜா மார்டன்ட் சிங் (ரேவா) 2.4 லட்சம் வாக்கு வித்தியாசத்திலும், 1984 தேர்தலில் ராகுல் காந்தி (அமேதி) 3.1 லட்சம் வாக்கு வித்தியாசத்திலும் வெற்றி பெற்றனர். 1989 தேர்தலில் ராம்விலாஸ் பாஸ்வான் (ஹாஜிபூர்) 5 லட்சம் வாக்கு வித்தியாசத்திலும், 1991 தேர்தலில் காங்கிரசின் சந்தோஷ் மோகன் (திரிபுரா மேற்கு) 4.3 லட்சம் வாக்கு வித்தியாசத்திலும் வெற்றி வாகை சூடினர்.
Similar News
News April 28, 2025
IPL: GT முதலில் பேட்டிங்

இன்றைய ஐபிஎல் போட்டியில் GT, RR அணிகள் மோதவுள்ளன. இதற்கான டாஸ் வென்ற RR கேப்டன் ரியான் பராக், முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்திருக்கிறார். RCBயிடம் முதலிடத்தை தவற விட்டிருக்கும் GT அணி, இன்று அதனை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் இறங்கும். அதேநேரம், 9-வது இடத்தில் இருக்கும் RR அணி, ஆறுதல் வெற்றியை நோக்கி தனது வீரர்களை களமிறக்கவுள்ளது.
News April 28, 2025
தங்க பத்திர திட்ட முதலீடு: RBI புதிய அறிவிப்பு!

2020 – 21-ம் நிதியாண்டில் தங்க பத்திர திட்டத்தில் (SGB) முதலீடு செய்தவர்கள் முன்கூட்டியே அவற்றை திரும்பப் பெறலாம் என RBI அறிவித்துள்ளது. இவ்வாறு விற்பனை செய்பவர்களுக்கு 1 யூனிட் (அ) 1 கிராம் தங்கத்திற்கு ₹9,600 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக தங்க பத்திரங்கள் 8 ஆண்டுகள் முதிர்வு காலம் கொண்டவை. ஆனால் 5 ஆண்டுகள் முடிந்த உடனே அதனை விற்று பணமாக்கும் வாய்ப்பை RBI தற்போது அறிவித்துள்ளது.
News April 28, 2025
சென்னையில் பாகிஸ்தானியர் காலமானார்

சென்னையில் ஹாஸ்பிடலில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பாகிஸ்தானியர் காலமானார். பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானியர்கள் உடனே வெளியேற வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டிருந்தன. இந்நிலையில், உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த பாகிஸ்தானியர் உயிரிழந்தார். இறந்த நபரின் உடலையும், அவரின் தாயையும் பாகிஸ்தானுக்கு அனுப்ப அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.