News April 14, 2024
பாஜகவின் முக்கிய வாக்குறுதிகள்

மக்களவைத் தேர்தலையொட்டி பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம், பொது வாக்காளர் பட்டியல் உருவாக்கம், 5 ஆண்டுகளுக்கு இலவச ரேஷன், பொதுசிவில் சட்டம், ₹1க்கு சானிட்டரி நாப்கின், 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு ₹5 லட்சம் மருத்துவ காப்பீடு, திருநங்கைகளுக்கு மருத்துவ காப்பீடு, கிராமங்களில் பைப் லைன் எரிவாயு விநியோகம் உள்ளிட்ட திட்டங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
Similar News
News September 9, 2025
முதுகு வலியை ஈசியாக விரட்டும் யோகா!

✦முதுகு தண்டு வலிமை பெற, தொப்பை குறைய சேது பந்தாசனம் உதவும்.
➥முதலில் தரையில் மல்லாந்து படுத்து, முழங்கால்களை மடித்து, கால்களை தரையில் ஊன்றவும்.
➥பாதங்களை இடுப்பிற்கு அருகே வைத்து இடுப்பை மேலே உயர்த்துங்கள். கைகளை பக்கவாட்டில் தரையில் பதியுங்கள்
➥மார்பு, கழுத்து, இடுப்பு பகுதிகளை நேராக வைத்து, இந்த நிலையில் சில நொடிகள் இருந்துவிட்டு, மெதுவாகக் கீழே இறங்க வேண்டும். Share it to friends.
News September 9, 2025
கூட்டணி பிரச்னைகள் தீரும்: தமிழிசை நம்பிக்கை

செங்கோட்டையனால் அதிமுகவில் மீண்டும் உள்கட்சி விவகாரம் பூதாகரமாகியுள்ளது. இதில், அதன் கூட்டணி கட்சியான பாஜக தரப்போ, அது உள்கட்சி பிரச்னை என்று கூறியே ஒதுங்குகிறது. அத்துடன், கூட்டணியை சரியாக கையாளவில்லை என TTV சாடியதும் மீண்டும் கூட்டணிக்குள் குழப்பம் நீடித்தது. இந்நிலையில், 2026 தேர்தலுக்குள் கூட்டணியில் நிலவும் அனைத்து பிரச்னைகளும் தீர்ந்துவிடும் என தமிழிசை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
News September 9, 2025
பாஜக தலைமையில் புதிய கூட்டணி?

அதிமுக ஒருங்கிணைப்புக்கு EPS மறுத்தால் புதிய கூட்டணியை உருவாக்க BJP திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2024 தேர்தலை போல TTV, சசிகலா, OPS, செங்கோட்டையன், ஜான் பாண்டியன், கிருஷ்ணசாமி ஆகியோரை இணைத்து BJP போட்டியிடும் என கூறப்படுகிறது. நயினாரும் தங்களது இலக்கு 2026 அல்ல 2029 என பேசியிருந்தார். டிசம்பரில் கூட்டணி அறிவிக்கப்படும் என TTV பேசி வருகிறார். எனவே, டிசம்பரில் காட்சிகள் மாறக்கூடும்.