News April 14, 2025
CSK அணியில் முக்கிய மாற்றங்கள்

LSG அணிக்கு எதிராக விளையாடும் CSK அணியில் கேப்டன் தோனி இரண்டு முக்கிய மாற்றங்களை செய்துள்ளார். இன்றைய போட்டியில், கான்வேக்கு பதிலாக ரஷீத்தும் அஷ்வினுக்கு பதிலாக ஓவர்டன்னும் களம் இறங்கவுள்ளனர். அதேபோல, LSG அணியில் ஹிம்மத் சிங்குக்கு பதிலாக மிட்செல் மார்ஷ் களமிறங்கவுள்ளார். இந்த மாற்றங்கள் CSK அணிக்கு கை கொடுக்குமா என்று கமெண்ட்டில் சொல்லுங்க
Similar News
News December 1, 2025
14,967 பணியிடங்கள், ₹78,800 வரை சம்பளம்: முந்துங்க!

கேந்திரிய வித்யாலயா & நவோதயா வித்யாலயா பள்ளிகளில் காலியாகவுள்ள 14,967 ஆசிரியர் & ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: 10th, UG, PG உடன் B.Ed (பதவிகளுக்கேற்ப). சம்பளம்: ₹18,900 – ₹78,800 (பணிக்கு ஏற்ப). விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.4. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <
News December 1, 2025
BREAKING: கேஸ் சிலிண்டர் விலை குறைந்தது

சர்வதேச எண்ணெய் சந்தை நிலவரப்படி, மாத தொடக்க நாளான இன்று (டிச.1) கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ₹10.50 குறைந்துள்ளது. இதனால் சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் ₹1,739.50-க்கு விற்கப்படுகிறது. அதேநேரம், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லாமல் ₹868.50-க்கே விற்பனை செய்யப்படுகிறது.
News December 1, 2025
அதிமுக எங்களை ஏமாற்றவில்லை: பிரேமலதா

ராஜ்யசபா MP விவகாரத்தில் அதிமுக தேமுதிகவை ஏமாற்றவில்லை என பிரேமலதா கூறியுள்ளார். அதிமுகவிடம் MP பதவியை 2025-ல் கேட்டதாக கூறிய அவர், அதிமுகவில் இருந்து 2026-ல் தருவதாக உறுதியளித்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், MP சீட் விவகாரத்தை அதிமுக ஏமாற்றிவிட்டதாக பேசி வந்த இவர், இப்படி அந்தர் பல்டி அடித்திருப்பது கூட்டணி கணக்குக்கு தானா என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


