News March 1, 2025
இன்று முதல் அமலாகும் முக்கிய மாற்றங்கள்

*மாத முதல் நாளான இன்று, வணிக LPG சிலிண்டர் விலை ₹5.50 உயர்த்தப்பட்டுள்ளது
* FD வட்டியை வங்கிகளே திருத்திக் கொள்ளும் திட்டம் இன்று முதல் அமலாகிறது.
* UPI மூலம் இன்சூரன்ஸ் ப்ரீமியம் செலுத்துவது எளிமைப்படுத்தப்படுகிறது.
* மியூச்சுவல் ஃபண்டுகளுக்கான நாமினிகள் பதிவு செய்யும் விதிகளில் மாற்றம்.
* GST வரிப்பதிவில் multi factor authentication அமல்படுத்தப்பட்டுள்ளது.
Similar News
News March 1, 2025
அண்ணாமலையை முதல்வராக்க பாடுபடும் நடிகர்

பாஜக தலைவர் அண்ணாமலையை முதல்வராக்க பாடுபடுவேன் என்று நடிகரும் பாஜக நிர்வாகியுமான சரத்குமார் பேசியுள்ளார். தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்துக் கொண்ட அவர், அண்ணாமலையுடன் இணக்கமாக இருக்கிறார். இந்நிலையில், அடுத்த பாஜக தலைவர் ஆகும் எண்ணம் இல்லையென்றும் இறுதி வரை கட்சிக்காக உழைப்பேன் என்றும் அவர் பேசியுள்ளார்.
News March 1, 2025
தங்கம் விலை சவரனுக்கு ₹160 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ( மார்ச் 1) கிராமுக்கு ₹20 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹7,940க்கும், சவரன் ₹63,520க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் 105க்கும், பார் வெள்ளி கிலோ 1,05,000க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை தொடர்ந்து 4ஆவது நாளாக குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது. தங்கம் விலை சரிவு குறித்து உங்கள் கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க.
News March 1, 2025
ஏன் ஹாஸ்பிடல் சென்றாலே நாக்கை நீட்ட சொல்றாங்க?

எந்த பிரச்னை எனக் கூறி, ஹாஸ்பிடல் சென்றாலும், டாக்டர்கள் முதலில் ‘நாக்கை நீட்டுங்க’ என்பார்கள். அது ஏன் என யோசித்தது உண்டா? நாக்கின் தன்மையை வைத்தே உடல் ஆரோக்கியத்தை அறியலாம். உடலில் நீரிழப்பு ஏற்பட்டால், நாக்கு மஞ்சள் நிறத்திலிருக்கும். ரத்த உடலில் ரத்த சோகை இருந்தால், நாக்கு வறண்டு போகும். நோய்த்தொற்று அதிகமாக இருந்தால், நாக்கு வெள்ளையாக மாறும். தைராய்டு இருந்தால், நாக்கு பெரிதாகும்.