News November 17, 2024
நாளை நயன் படத்தின் முக்கிய அறிவிப்பு

நயன்தாரா நடித்து வரும் புதிய படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ரவுடிகள் சுற்றி நிற்க உலக்கையுடன் நயன்தாரா நிற்கும் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தை டிரம்ஸ்டிக்ஸ் ப்ரடொக்ஷன்ஸ் நிறுவனமும், மூவிமேக்கர்ஸ் ஸ்டூடியோவும் இணைந்து தயாரிக்கிறது. தனுஷை கடுமையாக விமர்சித்து நயன்தாரா நேற்று அறிக்கை வெளியிட்ட நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வந்துள்ளது.
Similar News
News March 4, 2026
தென் மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக, அமமுக

திமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆனால், அதிமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவே இல்லை. இன்று நடைபெறும் அதிமுக மா.செ., கூட்டத்திற்கு பிறகு தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் பாஜக, அமமுக அதிகமான இடங்களில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
News March 4, 2026
நெட் இல்லாமலும் Gmail செக் பண்ணலாம்; இதோ Trick

முக்கியமான மெயிலை செக் பண்ணும்போது இண்டர்நெட் கட் ஆகிடுச்சுனா? கவலையவிடுங்க. Gmail-ல் மெயில்களை Offline-லயும் Access பண்ணலாம். ➤உங்கள் Laptop-ல் Gmail-ஐ Login செய்யுங்கள் ➤செட்டிங்ஸ் ஐகானை க்ளிக் செய்து ‘Quick Settings’ என்ற ஆப்ஷனை அழுத்துங்க ➤See All Settings என்ற ஆப்ஷன் காட்டும் ➤அதை க்ளிக் செய்தால் Offline என்ற ஆப்ஷன் வரும் ➤அதற்குள் சென்று Enable செய்யுங்க. பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.
News March 4, 2026
பள்ளி மாணவி குழந்தை பெற்றார்

தெலங்கானாவில் 16 வயது மாணவி குழந்தை பெற்றுள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. வயிற்று வலியால் தவித்துவந்த அந்த மாணவி, ஹாஸ்பிட்டலுக்கு ஸ்கேன் எடுக்க சென்றுள்ளார். அப்போது வலி மேலும் அதிகரிக்க, ஹாஸ்பிடலின் பாத்ரூமிலேயே ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதனால் பதறிப்போன மாணவியும் அவரது தாயாரும், அக்குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசியுள்ளனர். இது போலீசுக்கு தெரியவர, விசாரணை நடந்து வருகிறது.


