News April 3, 2024

ஷைனி வில்சனுக்கு முக்கிய பொறுப்பு

image

பிரபல ஓட்டப்பந்தய வீராங்கனை ஷைனி வில்சன் ஆசிய விளையாட்டு ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். 2028 வரை நான்கு ஆண்டு காலம் அவர் இந்த பொறுப்பில் இருப்பார். 1986இல் சியோல் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இவர் 4×400 மீட்டர் பிரிவில் தங்கம் வென்றவர். இதேபோல், தெற்காசிய ஃபெடரேஷன் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை குவித்துள்ளார். மேலும், பத்மஸ்ரீ விருதையும் இவர் பெற்றுள்ளார்.

Similar News

News January 1, 2026

2026-ன் முதல் சூரிய உதயம் PHOTOS

image

2026-ம் ஆண்டின் முதல் சூரிய உதயம் ஒரு புதிய தொடக்கத்தை குறிக்கிறது. நாடு முழுவதும் மக்கள் நம்பிக்கையுடனும் நல்வாழ்த்துக்களுடனும் புத்தாண்டை வரவேற்றனர். புதிய ஆண்டின் முதல் சூரிய உதயம் புத்துணர்ச்சியான தொடக்கத்தை ஏற்படுத்தியது. மேலே, இந்தாண்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் எடுக்கப்பட்ட முதல் சூரிய உதயத்தை, போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

News January 1, 2026

மதுப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. அரசு புதிய உத்தரவு

image

புத்தாண்டையொட்டி போதுமான மதுபானங்களை கையிருப்பில் வைக்க மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி விற்பனை அதிகரிக்கும் என்பதற்காக ஒரு வாரத்திற்கான மதுபானங்களை இருப்பில் வைக்க அறிவுறுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குறைந்த ரக மதுபானங்கள் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

News January 1, 2026

இது பெரிய அவமானம்..

image

சர்பராஸ் கான் இந்திய அணியில் தேர்வாகாதது குறித்து Ex வீரர் திலீப் வெங்சர்க்கார் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரை கடுமையாக விமர்சித்துள்ளார். விளையாட்டின் அனைத்து வடிவங்களிலும் விளையாட போதுமான நல்ல வீரர் சர்ஃபராஸ் கானை புறக்கணிப்பது மிகவும் அவமானம் என சாடியுள்ளார். விஜய் ஹசாரே தொடரில் கோவா அணிக்கு எதிரான போட்டியில் சர்பராஸ் கான், <<18721642>>157 ரன்களை<<>> விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!