News August 25, 2024
தோல்விக்கு மைதானம் முக்கிய காரணம்: ஷான் மசூத்

வங்கதேசத்திற்கு எதிரான தோல்விக்கு மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இல்லாததே காரணம் என பாக்., கேப்டன் ஷான் மசூத் தெரிவித்துள்ளார். பாக்., பந்துவீச்சாளர்களுக்கு எதிராக, வங்கதேச வீரர்கள் சிறப்பாக விளையாடியதாகவும், சில கணிப்புகள் தவறாக போனதுமே தோல்விக்கு முக்கிய காரணம் என விளக்கமளித்தார். முன்னதாக, பாக்., எதிரான முதல் டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் முதல் முறையாக வங்கதேசம் வெற்றிபெற்றது.
Similar News
News March 5, 2026
நாணயங்கள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது தெரியுமா?

தற்போது புழக்கத்தில் இருக்கும் நாணயங்கள் வட்ட வடிவில் இருப்பது தற்செயலாக நடந்ததில்லை. 1950-ம் ஆண்டு ஏற்பட்ட இந்த மாற்றத்திற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன *கூர்மையான முனைகள் இல்லாததால், நாணயங்களும் சேதமடையாது, அவற்றை உபயோகிப்பவருக்கும் கையில் கீரல் ஏற்படாது *நாணயங்களை வட்ட வடிவ செய்வது எளிது, செலவும் குறைவு *உற்பத்தியின் போது, வட்ட வடிவம் என்பதால், மெஷினிலும் சிக்காது. SHARE.
News March 5, 2026
சர்வதேச சந்தையில் தங்கம் விலை தடாலடியாக மாறியது

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போரின் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் (28g) தங்கம் $47 (இந்திய மதிப்பில் ₹4,329.80) உயர்ந்து $5,177.01-க்கு விற்பனையாகிறது. அதேபோல வெள்ளியின் விலையும் $1 உயர்ந்து $84.31-க்கு விற்பனையாகிறது. இதன் தாக்கம், இந்திய சந்தையிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.
News March 5, 2026
தமிழக அரசியலில் இதுவே முதல்முறை

2026 தேர்தலுக்கு திமுக 21 கட்சிகளுடன் பிரமாண்டமான கூட்டணியை அமைத்துள்ளது. TN அரசியல் வரலாற்றிலேயே ஒரே கூட்டணி, சிந்தாமல் சிதறாமல் மேலும் புதிய கட்சிகளை சேர்த்து 4-வது முறையாக தேர்தலை சந்திப்பது இதுவே முதல் முறை. குறிப்பாக, அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகள்கூட(பிரேமலதா, தமிமுன் அன்சாரி, நெல்லை முபாரக், கருணாஸ், தனியரசு உள்ளிட்டோர்) திமுகவுடன் இணைந்துள்ளன.


