News October 15, 2025
முக்கிய ஆஸி. வீரர்கள் விலகல்: இந்தியாவுக்கு சாதகமா?

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ODI மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது. முதலில் ஒருநாள் போட்டிகளும், அதனை தொடர்ந்து டி20 போட்டிகளும் நடக்கின்றன. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஆடம் ஜாம்பா மற்றும் ஜோஷ் இங்லிஷ் விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 15, 2025
சர்க்கரைவள்ளிக் கிழங்கில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்

உணவு, உடை, வேலை சூழல் என அன்றாட வாழ்க்கை முறை மாறி வருகிறது. இந்த சூழலில் நமது உடல்நலத்தை பேணுவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியமாகிறது. இந்த சூழலில் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்யத்தை மேம்படுத்த உதவுகிறது. அந்த வகையில், சர்க்கரை வள்ளிக்கிழங்கின் பல நன்மைகள் அடங்கியுள்ளன. அதனை மேலே Swipe செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
News October 15, 2025
கரூர் துயரம்: இரவில் CM ஸ்டாலின் ஆலோசனை

கரூரில் விஜய் தேர்தல் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், அரசியல் கூட்டங்களுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய மசோதா, நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. CM ஸ்டாலின் இதுதொடர்பாக என்.ஆர்.இளங்கோ MP, அதிகாரிகளுடன் நேற்று இரவு ஆலோசனையில் ஈடுபட்டார்.
News October 15, 2025
இந்திய வங்கிகள் வெட்கப்பட வேண்டும்: மல்லையா

தனது சொத்துக்களை விற்று ₹14,100 கோடி மீட்டுள்ளதாக நிதியமைச்சகமே அறிவித்துள்ளதாக விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். ஆனால், அது குறித்த வெளிப்படையான அறிக்கையை இன்னும் இந்திய வங்கிகள் வெளியிடவில்லை எனவும், இதற்கு வெட்கப்பட வேண்டும் என்றும் அவர் சாடியுள்ளார். வங்கிகளில் வாங்கிய கடனை விடவும் அதிகம் வசூலித்துவிட்டதாக அவர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் அவர், தற்போது லண்டனில் இருக்கிறார்.