News April 27, 2025
ரூட்டை மாற்றிய மஹிந்திரா.. ₹555 கோடிக்கு ஒப்பந்தம்!

SML Isuzu நிறுவனத்தின் 58.96% பங்குகளை ₹555 கோடிக்கு வாங்க உள்ளதாக மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது. ஒரு பங்கை ₹650 என்ற விலையில் வாங்க உள்ளது. இதன்மூலம், 3.5 டன்களுக்கு மேலான வணிக வாகன உற்பத்தியில் அந்நிறுவனம் இறங்கியுள்ளது. இந்திய சந்தையில் பேருந்து, லாரி விற்பனையில் SML Isuzu நிறுவனம் முன்னணியில் உள்ளது. கடந்த 2024 நிதியாண்டில் அந்நிறுவனம் ₹2,196 கோடி வருமானம் ஈட்டியது.
Similar News
News April 27, 2025
வெடி விபத்தில் 4 பேர் பலி: ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு

சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியான 4 பேரின் குடும்பத்தினருக்கும் CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த துயரத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 4 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.4 லட்சம், பலத்த காயமடைந்தோருக்கு தலா ரூ.1 லட்சம், லேசான காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 வழங்கவும் அவர் ஆணையிட்டுள்ளார்.
News April 27, 2025
இந்தியா – பாக். வர்த்தகம் : கோவைக்கு பாதிப்பா?

பஹல்காம் தாக்குதலை அடுத்து, பாக். மீது பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. இதனால், கோவை, திருப்பூரில் தொழில்கள் பாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், ஆயத்த ஆடை தயாரிப்பில் பாக். நமக்கு போட்டி நாடே தவிர, இதனால் பாதிப்பில்லை என வர்த்தகர்கள் கூறியுள்ளனர். மேலும், இதனால் எல்லைப் பகுதியில் மட்டுமே பிரச்னை என்றும், உக்ரைன், ரஷ்யா போரிலும் நமக்கு பின்னடைவும் இல்லை என்றனர்.
News April 27, 2025
தாக்குதலுக்கு கடுமையான பதிலடி உறுதி : PM மோடி

பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என PM மோடி கூறியுள்ளார். மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய அவர், சர்வதேச தலைவர்கள் என்னைத் தொடர்புகொண்டு இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தனர் எனக் கூறினார். முழு உலகமும் நம்முடன் நிற்கிறது என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும் என்றும் மோடி உறுதியளித்தார்.