News September 6, 2025
₹1.50 லட்சம் வரை குறைந்த மகேந்திரா கார்களின் விலை

1500 CC க்கு உட்பட்ட கார்களின் GST, 28%-ல் இருந்து 18% -ஆக குறைக்கப்பட்டதால், அதனை மதிப்பிட்டு கார்களின் விலையை மகேந்திரா குறைத்துள்ளது. அதன்படி XUV3XO(₹1.40லட்சம் வரை), XUV3XO (₹1.56 லட்சம்), THAR 2WD (Diesel, ₹1.35 லட்சம்), THAR 4WD (Diesel, 1.01 லட்சம்), Scorpio Classic (1.01 லட்சம்), Scorpio-N (₹1.45 lakh) Thar Roxx(1.33 லட்சம்) என குறைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு கார் வாங்கும் ஆசை இருக்கா?
Similar News
News March 20, 2026
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா CPM?

திமுக கூட்டணியில் 6 தொகுதிகளுக்கு கீழ் தருவதை CPM ஏற்க மறுக்கிறது. இதுதொடர்பாக திமுகவும், CPM-மும் மாறிமாறி பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனிடையே அக்கட்சியின் மாநிலக் குழு கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் 5 தொகுதிகளை ஏற்று திமுக கூட்டணியில் தொடர்வதா, அல்லது தவெகவுடன் கூட்டணிக்கு செல்லலாமா என்பது குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News March 20, 2026
BREAKING: இரவில் சந்திப்பு.. கூட்டணி கணக்கு மாறுகிறது

டெல்லியில் நேற்றிரவு அமித்ஷாவை சந்தித்த EPS, தொகுதி பங்கீடு இழுபறி குறித்து ஆலோசனை நடத்தினார். இதில், பாஜக 30 தொகுதிகள் கேட்ட நிலையில், 25 தொகுதிகளை ஒதுக்குவதாக EPS தெரிவித்தததாக கூறப்படுகிறது. அதேபோல், பாமகவுக்கு 22, அமமுகவுக்கு 6, தமாகாவுக்கு 3 தொகுதிகளையும் அவர் கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்ததால் விரைவில் தொகுதி பங்கீடு இறுதியாகும் என தெரிகிறது.
News March 20, 2026
விஜய் டெபாசிட்டை இழப்பார்: அர்ஜூன் சம்பத்

அதிமுக கூட்டணிக்கு செல்லும் வாக்குகளை பிரிக்கும் வேலையைத் தான் தவெக செய்வதாக அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். ஆனால் தவெகவின் செல்வாக்கு குறைந்து வருவதாகவும், 234 தொகுதிகளிலும் டெபாசிட்டை இழப்பார்கள் எனவும் கூறியுள்ளார். மேலும் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்த ஆதவ் அர்ஜுனா திட்டமிட்டு தவெகவை இயக்கி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.


