News September 14, 2024
மகாவிஷ்ணுவுக்கு செப்.20 வரை நீதிமன்ற காவல்

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவை செப்.20 வரை புழல் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் சொற்பொழிவாற்றிய அவர் மீது பல்வேறு தரப்பில் இருந்தும் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்த நிலையில், 3 நாள்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டது. நேற்றுடன் காவல் முடிந்த நிலையில் தற்போதுசிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Similar News
News December 5, 2025
கடலூர் மாவட்டத்தில் 2.5 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் ?

கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் இதுவரை நடந்த கணக்கெடுப்பில் இறப்பு, முகவரி மாற்றம், இரட்டைப் பதிவு, ஊரில் வசிக்காமை போன்ற காரணங்களுக்காக 2,62,650 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் வரும் 11-ம் தேதி வரை அவகாசம் இருப்பதால் நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் ஒரு முறை சரிபார்க்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News December 5, 2025
இந்தாண்டில் மக்கள் கூகுளில் அதிகம் தேடியவை (PHOTOS)

கூகுள், 2025-ம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட தலைப்புகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், IPL முதலிடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து, வேறு எவையெல்லாம் அதிகம் தேடப்பட்டுள்ளன என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. கூகுளில், நீங்கள் அதிகம் தேடியது எது? கமெண்ட்ல சொல்லுங்க. SHARE பண்ணுங்க.
News December 5, 2025
ஏழுமலையான் பக்தர்களின் கவனத்திற்கு..

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 28-ம் தேதி தொடங்கி ஜனவரி 8-ம் தேதி வரை வைகுண்ட துவார தரிசனம் நடைபெறவுள்ளது. ஜனவரி 2-ம் தேதி முதல் ஜனவரி 8-ம் தேதி வரை சிறப்பு தரிசன டிக்கெட்களுக்கான (₹300) முன்பதிவு இன்று மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. ஒரு நாளைக்கு 15 ஆயிரம் டிக்கெட்கள் வெளியிடப்படும். டிக்கெட்களை பெற <


