News August 10, 2025
வசூலை அள்ளும் ‘மகாவதார் நரசிம்மா’!

சாமி படத்தை அனிமேஷனில் யார் பார்க்க போகிறார்கள் என்று நினைத்தவர்களின் கணிப்பை ‘மகாவதார் நரசிம்மா’ மாற்றிவிட்டது. படம் ரசிகர்களை பெரிதாக கவர்ந்து தற்போது வரை ₹150 கோடி வசூலை குவித்துள்ளது. யுனிவர்ஸ் கான்செப்ட்டில் உருவான இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த 6 படங்கள் வெளியாகவுள்ளன. அவற்றை பிரமாண்டமாக தயாரிக்கும் வேலைகளில் இறங்கியுள்ளது ஹொம்பாலே பிலிம்ஸ். நீங்க படம் பாத்துட்டீங்களா?
Similar News
News August 10, 2025
நேற்று அன்புமணி.. இன்று ராமதாஸ்..

பூம்புகாரில் இன்று மாலை 3 மணிக்கு ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்க மாநில மகளிர் மாநாடு நடைபெறவுள்ளது. நேற்று இரவே மாநாட்டு திடலுக்கு சென்ற ராமதாஸ் ஏற்பாடுகளை பார்வையிட்டார். இந்த மாநாட்டில் வன்னியர்களுக்கு 10.5 இட ஒதுக்கீடு, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று மாமல்லபுரத்தில் அன்புமணி தலைமையில் பொதுக்குழு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
News August 10, 2025
ஏன் கோயிலுக்கு சென்றால் சில நேரங்கள் அமர வேண்டும்!

சிவன் கோயிலுக்கு சென்றால், சில நிமிடமாவது அமர்ந்துவிட்டு வரவேண்டும். காரணம், சிவன் கோவிலில் இருந்து எதையுமே வீட்டுக்கு கொண்டு வரக் கூடாது என்பதால், சில நிமிடங்கள் அமர்ந்து விட்டு புறப்பட வேண்டும். ஆனால், பெருமாள் கோயிலுக்கு சென்றால், நேரடியாக வீட்டுக்கு வந்துவிடலாம். காக்கும் கடவுளான விஷ்ணுவை வணங்கினால், வருமானம் அதிகரித்து, செல்வம் பெருகும் என்பது ஐதீகம். SHARE IT.
News August 10, 2025
கன்னட திரையுலகை ஆட்டிவைக்கும் ‘கூலி’!

ரஜினி- லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளிவர இருக்கும் ‘கூலி’ படத்துக்கு இருக்கும் எதிர்பார்ப்பு ப்ரீ புக்கிங்கிலேயே வெளிப்படுகிறது. கன்னட திரையுலகின் மெகா ஹிட் படமான ‘KGF 2’-வை விட பெங்களூருவில் ‘கூலி’ படத்துக்கு தான் அதிக புக்கிங் ஆகியுள்ளது. ‘கூலி’ படத்துக்கு வெறும் 37 நிமிடங்களில் 10 ஆயிரம் டிக்கெட்கள் விற்றுள்ளன. அதே நேரத்தில், KGF 2-க்கு 45 நிமிடங்களில் தான் 10 ஆயிரம் டிக்கெட்கள் விற்றன.