News April 2, 2025
மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தி காலமானார்!

மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தியான நிலம்பென் பாரிக் (92) காலமானார். மகாத்மா காந்தியின் மகன் ஹரிதாஸ் காந்தியின் பேத்தி இவர். குஜராத்தில் வசித்து வந்த இவர், பழங்குடியின பெண்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைத்தார். காந்திக்கும் அவரின் மூத்த மகனுக்கும் இடையே இருந்த சிக்கலான உறவு குறித்து இவர் எழுதிய ‘காந்தி’ஸ் லாஸ்ட் ஜிவெல்: ஹிராலால் காந்தி’ மிக பிரபலம். RIP நிலம்பென் பாரிக்.
Similar News
News April 3, 2025
தங்கம் விலை சவரனுக்கு ₹400 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்.3) சவரனுக்கு ₹400 உயர்ந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,560க்கும், சவரன் ₹68,480க்கும் விற்பனையாகிறது. நேற்று தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனையான நிலையில், இன்று மீண்டும் ஏறுமுகத்தைக் கண்டு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. தங்கம் விலை உயர்வு குறித்த உங்கள் கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க..
News April 3, 2025
GTயின் சூப்பர்ஸ்டாரான ‘தமிழர்’ சாய் சுதர்ஷன்!

IPL தொடரில், சாய் சுதர்ஷன் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர், தனது கடைசி 7 IPL இன்னிங்சில் 65(39), 84*(49), 6(14), 103(51), 74(41), 63(41) & 49(36) என ரன் குவிப்பில் ஈடுபட்டுள்ளார். GT அணிக்கு முக்கிய பங்காற்றி வரும் சாய் சுதர்ஷன், அந்த அணியின் சூப்பர்ஸ்டார் வீரராகவே மாறியுள்ளார். சுதர்ஷனை போன்ற வீரர் CSKல் இருந்திருக்க வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர்.
News April 3, 2025
திமுக எம்.எல்.ஏக்கள் கருப்பு பட்டையுடன் பேரவைக்கு வருகை

வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏக்கள் கருப்பு பட்டை அணிந்தவாறு சட்டப்பேரவைக்கு வருகை புரிந்துள்ளனர். இந்த மசோதா நேற்று இரவு மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.