News November 23, 2024
மகாராஷ்டிரா: முதல் வெற்றி அறிவிப்பு

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் முதல் வெற்றியை பாஜக பதிவு செய்துள்ளது. வடாலா தொகுதியின் பாஜக வேட்பாளர் காளிதாஸ் நில்கந்த் கோலம்கர் வெற்றி பெற்றிருப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் 125 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 19 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.
Similar News
News January 10, 2026
‘முதல்ல சுடுவோம்.. அப்புறம் தான் பேசுவோம்’

கிரீன்லாந்தை தரவில்லை என்றால் அதை வலுக்கட்டாயமாக எடுத்துக்கொள்வோம் என <<18770910>>டிரம்ப்<<>> கூறியிருந்தார். இந்நிலையில், கிரீன்லாந்துக்குள் USA வீரர்கள் நுழைந்தால் முதலில் துப்பாக்கிசூடு தான் நடத்துவோம், பிறகுதான் பேச்சுவார்த்தை நடத்துவோம் என டென்மார்க் எச்சரித்துள்ளது. இதனால், கிரீன்லாந்தை சேர்ந்தவர்களுக்கு பணம் கொடுத்து டென்மார்க்கிலிருந்து பிரிந்து USA-ல் இணைத்துக்கொள்ள டிரம்ப் திட்டமிடுவதாக கூறப்படுகிறது.
News January 10, 2026
ரூட்டை மாத்துகிறாரா ராமதாஸ்?

<<18806660>>ஸ்டாலினின் ஆட்சி நன்றாகதான்<<>> உள்ளது என நேற்று ராமதாஸ் பேசியுள்ளது கூட்டணிக்கான அச்சாரமாக இருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கருத்து கூறி வருகின்றனர். கடந்த 29-ம் தேதி சேலத்தில் நடைபெற்ற செயற்குழுவில் ஆட்சி மாற்றம் நிச்சயம் நடக்கும் என ஸ்ரீகாந்தி பேசினார். ஆனால், அன்புமணி, அதிமுகவுடன் கைகோர்த்ததால் அதற்கு எதிரான அணியில் இணைய ராமதாஸ் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உங்கள் கருத்து என்ன?
News January 10, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹800 உயர்வு!

22 கேரட் தங்கம் இன்று(ஜன.10) கிராமுக்கு ₹100 உயர்ந்து ₹12,900-க்கு விற்பனையாகிறது. 8 கிராம் கொண்ட சவரன் ₹800 உயர்ந்து ₹1,03,200-க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் ஏறுமுகத்தில் இருப்பதால், இந்திய சந்தையில் கடந்த 2 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹1,200 அதிகரித்து மிகப்பெரிய மாற்றத்தை கண்டுள்ளது.


