News November 23, 2024
மகாராஷ்டிரா தேர்தல் முடிவு எதிர்பாராதது: ராகுல்

மகாராஷ்டிரா தேர்தல் முடிவு எதிர்பாராதது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்க பதிவில் அவர், மகாராஷ்டிர தேர்தல் முடிவு குறித்து காங்கிரஸ் கட்சி ஆய்வு செய்யும் எனக் கூறியுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்த அந்த மாநில மக்களுக்கு இதயப்பூர்வமான நன்றியை தெரிவிப்பதாக கூறியுள்ள அவர், தேர்தல் வெற்றிக்காக முதல்வர் ஹேமந்த் சோரனுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Similar News
News January 2, 2026
ராசி பலன்கள் (02.01.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News January 2, 2026
ஹெல்மெட்டில் பாலஸ்தீனக் கொடியால் வெடித்த சர்ச்சை

ஜம்மு & காஷ்மீர் சாம்பியன்ஸ் லீக்கில் JK11 அணியின் வீரர் ஃபுர்கான் பட் பாலஸ்தீன கொடியுடன் கூடிய ஹெல்மெட்டில் அணிந்து விளையாடினார். ஜம்மு டிரெயில் பிளேசர்ஸுக்கு எதிரான போட்டியின் போது நடந்த இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஃபுர்கான் பட்டை போலீசார் அழைத்து விசாரித்துள்ளனர். மேலும் லீக் நிர்வாகி ஜாஹித் பட் மீதும் விசாரணை நடத்தப்படுகிறது.
News January 2, 2026
இரட்டை இலையுடன் தாமரை மலர வேண்டும்: தமிழிசை

தமிழ்நாட்டில் கஞ்சா இல்லை என்று அமைச்சர் மா.சு., அஞ்சாமல் பொய் சொல்வதாக தமிழிசை விமர்சித்துள்ளார். திமுகவினர் வெல்லும் பெண்கள் என மாநாடு நடத்துகின்றனர். ஆனால், துப்புறவு தொழிலாளர் பெண்கள், இந்த ஆட்சியின் அவலத்தை சொல்லும் பெண்களாக இருந்துக் கொண்டு இருக்கிறார்கள் என கூறினார். மேலும், தமிழக மக்களுக்கு உண்மையான விடிவுகாலம் வரவேண்டும் என்றால், இரட்டை இலையுடன் தாமரை மலர வேண்டும் என்றும் தெரிவித்தார்.


