News May 16, 2024
3 உயிர்களைக் காப்பாற்றிய மகான்

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தைச் சேர்ந்த கருணாகரன் (30) மே 11ஆம் தேதி விபத்தில் சிக்கினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். பின்னர், அவருடைய குடும்பத்தினரின் ஒப்புதலின்பேரில் அவருடைய இரண்டு சிறுநீரகங்களும் இருவேறு நபர்களுக்கு, கல்லீரல் ஒருவருக்கு என தானம் செய்யப்பட்டது. அனைவரும் நலமாக இருக்கின்றனர்.
Similar News
News January 16, 2026
வெள்ளி விலை இன்று ₹4,000 குறைந்தது

தங்கம் விலை இன்று(ஜன.16) <<18869879>>சவரனுக்கு ₹480<<>> குறைந்தது போல், வெள்ளியும் கிலோவுக்கு ₹4,000 குறைந்துள்ளது. இதனால், சில்லறை விற்பனையில் 1 கிராம் வெள்ளி ₹306-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹3,06,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை மீண்டும் சரியத் தொடங்கியுள்ளதால், இந்திய சந்தையில் குறையத் தொடங்கியுள்ளது.
News January 16, 2026
அமைதிக்கான நோபல் பரிசு டிரம்ப்புக்கு சொந்தமானதா?

மரியா மச்சாடோ தனது <<18868940>>நோபல்<<>> பதக்கத்தை டிரம்ப்புக்கு பரிசாக வழங்கினார். சுதந்திர வெனிசுலாவை பாதுகாக்க டிரம்ப் எடுத்த நடவடிக்கைகளுக்காக இதை வழங்குவதாக மரியா கூறினார். இதற்கு டிரம்ப், ‘பரஸ்பர மரியாதையின் அடையாளம்’ என நன்றியும் தெரிவித்துள்ளார். அதேநேரம், நோபல் பரிசை மாற்றவோ, பகிரவோ முடியாது என்பதால், பதக்கம் டிரம்ப்பிடம் இருந்தாலும், கௌரவம் மரியாவுக்கே சொந்தம் என நோபல் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
News January 16, 2026
உலகில் அதிக Government லீவு இருக்கும் நாடு எது தெரியுமா?

புது வருடம் பிறந்தாலே, இந்த ஆண்டில் எத்தனை அரசு விடுமுறை உள்ளது என பார்ப்பவர்கள்தான் அதிகம். உலகில் எந்த நாட்டில் அதிக அரசு விடுமுறைகள் உள்ளது என உங்களுக்கு தெரியுமா? மேலே உள்ள போட்டோவை இடது புறமாக Swipe செய்து, இந்த லிஸ்ட்டில் எந்த நாடு முதலிடத்தில் உள்ளது, இந்தியா எந்த இடத்தில் உள்ளது என்பதை தெரிஞ்சிக்கோங்க. உங்க ஆபிசில் வருஷம் எத்தனை லீவு தராங்க?


