News July 24, 2024
செல்வம் செழிக்க மகாலஷ்மி ஹோமம்

அம்பிகையை விசேஷ நாள்களில் ஹோமம் செய்து வழிபடுவது அதீத பலன் தரும் என ஆன்மிகவாதிகள் கூறுகின்றனர். குறிப்பாக, ஆவணி பெளர்ணமி நாளில் வழிபாடு செய்யலாம். ஆவணி மாதம் முழுவதுமே திருமகளுக்கு உரியது என்கிறது சாஸ்திரம். ஆவணி பௌர்ணமி நாளில், மகாலஷ்மி ஹோமமும் ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமப் பாராயணமும் செய்தால், குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதி பெருகும், தீராத கடன்கள் தீர்ந்து செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை.
Similar News
News March 4, 2026
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா காங்.,?

திமுக – காங்., கூட்டணியை உறுதிப்படுத்த இறுதியாக ப.சிதம்பரம் காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்பட்டார். ஆனால், அந்த பேச்சுவார்த்தையிலும் முன்னேற்றம் இல்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக, 40+ கேட்ட தொகுதிகளை கேட்ட காங்கிரஸின் கோரிக்கையை திமுக நிராகரித்துவிட்டதாம். இதனால், வலுவாக இருக்கும் திமுக கூட்டணியில் இருந்து முதல் கட்சியாக காங்., விலக அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
News March 4, 2026
‘கேரளா ஸ்டோரி 2’ TN அரசுக்கு சீமான் எச்சரிக்கை

இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் ‘கேரளா ஸ்டோரி 2’ படத்திற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இப்படத்தை TN-ல் திரையிட திமுக அரசு அனுமதித்தது வெட்கக்கேடானது என்றும், உடனடியாக தடைசெய்ய தவறினால் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் சீமான் எச்சரித்துள்ளார். இதுபோன்ற படங்கள் மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தி நாட்டின் ஒருமைப்பாட்டை சிதைக்கும் உள்நோக்கமுடையது எனவும் அவர் கூறியுள்ளார்.
News March 4, 2026
தவெகவின் தேர்தல் அறிக்கையில் இலவசங்களா?

விஜய் அமைத்த அருண்ராஜ் தலைமையிலான குழு, தவெகவின் தேர்தல் அறிக்கையை தயாரித்துவிட்டதாக கூறப்படுகிறது. வரும் 8-ம் தேதி முதற்கட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அதில், இளைஞர்கள், பெண்களை கவரும் வகையில் 10 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளதாம். அதுபோல, முழு அறிக்கையில் பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப், இணைய சேவை உள்ளிட்ட வாக்குறுதிகள் உள்ளதாக TVK வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


