News February 25, 2025
நாளையுடன் நிறைவடைகிறது மகாகும்பமேளா

பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளா நாளையுடன் நிறைவடைகிறது. 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகாகும்பமேளா கடந்த ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கியது. அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் இதுவரை 62 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடியிருப்பதாக உ.பி CM யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். இந்த மகாகும்பமேளா மகாசிவராத்திரி தினமான நாளை நிறைவடைகிறது. இதனால் திரளான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News February 25, 2025
5 பேர் கொலை வழக்கு: 10 பேருக்கு 4 ஆயுள் தண்டனை

நெல்லை அருகே 5 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேருக்கு தலா 4 ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. கோயிலில் சாமி ஆடுவது, ஆடு காணாமல் போனது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அத்தாளநல்லூரில் 5 பேர் 2009ம் ஆண்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 14 பேர் கைதான நிலையில், 3 பேர் இறந்து விட்டனர். இதனால் 10 பேருக்கு 4 ஆயுள், ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
News February 25, 2025
அதிமுக எம்எல்ஏ வீட்டில் ரெய்டு

கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் சோதனை நடந்து வருகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, வீரமணி, விஜயபாஸ்கர் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது எம்எல்ஏ வீட்டில் ரெய்டு நடத்தப்படுகிறது.
News February 25, 2025
கும்பமேளாவில் கின்னஸ் சாதனை முயற்சி

மகா கும்பமேளா நடக்கும் பிரயாக்ராஜில் சத்தமே இல்லாமல் கின்னஸ் உலக சாதனை படைக்கப்படவுள்ளது. கோடிக்கணக்கான மக்கள் திரிவேணியில் புனித நீராடிய நிலையில், நதி பாயும் இடங்களில் எல்லாம் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. அவற்றை அப்புறப்படுத்த ஒரே நேரத்தில் 15,000 தூய்மை பணியாளர்களை பல்வேறு இடங்களில் களமிறக்கி இந்த சாதனை முயற்சி படைக்கப்படவுள்ளது. இதற்கான முடிவுகள் வரும் 27 ஆம் தேதி வெளியாகும்.