News February 23, 2025
₹700 கோடி பட்ஜெட்டில் மகாபாரத படம்: லிங்குசாமி

இயக்குநர் லிங்குசாமி அடுத்ததாக ₹700 கோடி பட்ஜெட்டில் புராண திரைப்படத்தை இயக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். மகாபாரதத்தை வைத்து அபிமன்யு, அர்ஜுனன் என 2 பாக கதையம்சம் கொண்ட படத்தினை உருவாக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் அவர் கூறியுள்ளார். இவர் கடைசியாக இயக்கி ‘தி வாரியர்’ படம் ஃபிளாப் ஆனது.
Similar News
News February 23, 2025
ஜகபர் அலி கொலை வழக்கு: 3 பேர் மீது குண்டாஸ்

சமூக செயற்பாட்டாளர் ஜகபர் அலி கொலை வழக்கில் கைதான 5 பேரில் 3 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது. குவாரி உரிமையாளர்கள் ராசு, ராமையா மற்றும் லாரி உரிமையாளர் முருகானந்தம் ஆகியோரை CBCID போலீசார் பரிந்துரையின் பேரில், ஆட்சியர் அருணா குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோத குவாரிகளுக்கு எதிராக புகார் கொடுத்த ஜகபர் அலி கடந்த ஜன.17ம் தேதி லாரி ஏற்றிக் கொலை செய்யப்பட்டார்.
News February 23, 2025
ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த நடிகை

ஆம் ஆத்மி கட்சியில் பிரபல நடிகை சோனியா மான் இணைந்துள்ளார். மலையாளம், தெலுங்கு, பஞ்சாபி மொழிகளில் ஏராளமான படங்களில் அவர் நடித்துள்ளார். பிரபல பாடகர் சித்து மூஸ் வாலா உள்ளிட்ட பலரின் இசை ஆல்பங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் அவர், அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார். அவர், விவசாய அமைப்புத் தலைவர்களில் ஒருவரான பல்தேவின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
News February 23, 2025
கொடிய நோய்க்கு டாடா சொன்ன நாள் இன்று

இரு தலைமுறைகளுக்கு முன்புவரை வீட்டிற்கு ஒருவர் போலியோவால் பாதிக்கப்பட்டிருப்பார். அவருக்கு கைகளோ அல்லது கால்களோ செயல்படாமல் இருக்கும். போலியோ என்ற பெயர் கொண்ட இந்த நோய்க்கு முதல் தடுப்பூசி 1954ஆம் ஆண்டு இதே நாளில் போடப்பட்டது. அதன்பின், படிப்படியாக வளர்ச்சி பெற்று, இன்று போலியோ இல்லாத நாடாக இந்தியா முன்னேறியிருக்கிறது. நீங்களும் தவறாமல் உங்கள் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து போடுங்க.