News February 23, 2025

மகா கும்பமேளா: அயோத்தியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

image

மகா கும்பமேளா எதிரொலியாக அயோத்தி ராமர் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவுக்கு வருகை தரும் பக்தர்கள், அங்கு புனித நீராடிய பின்னர், அயோத்தி ராமர் கோவிலுக்கு தரிசனம் செய்ய வருகின்றனர். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதுவரை திரிவேணி சங்கமத்தில் இதுவரை 59 கோடியே 31 லட்சம் பக்தர்கள் புனித நீராடியுள்ளதாக உ.பி அரசு தெரிவித்துள்ளது.

Similar News

News March 31, 2026

மாதவிடாயை தள்ளிப்போட மாத்திரை.. எச்சரிக்கை

image

ஃபங்ஷன் வருது, கோயிலுக்கு போகணும், இப்படி ஏதோ ஒரு காரணத்துக்காக பல பெண்கள் பீரியடை தள்ளிபோட மாத்திரை உட்கொள்கின்றனர். ஆனால், இது நல்லதல்ல என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் குமட்டல், தலைவலி, மூட் ஸ்விங் போன்ற Side effects ஏற்படுவதுடன் 75% பேருக்கு பீரியட் பிரச்னைகள், அதிக ரத்தப்போக்கு பாதிப்பு ஏற்படுகிறதாம். தொடர்ந்து பயன்படுத்தினால் ரத்தக்கட்டு, ஹார்மோன் பாதிப்பும் ஏற்படுமாம். ALERT!

News March 31, 2026

அண்ணாமலைக்கு அழைப்பு.. ஹெலிகாப்டரில் புறப்பட்டார்

image

வரும் சட்டப்பேரவை தேர்தலில் அண்ணாமலை போட்டியிடவில்லை என தொடர்ந்து செய்திகள் வந்தன. இந்நிலையில், சென்னை கமலாலயத்தில் பியூஷ் கோயல் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள அவருக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து புதுச்சேரி பிரசாரத்தில் இருந்த அவர் ஹெலிகாப்டர் மூலம் சென்னைக்கு வர உள்ளதாகவும் கூறப்படுகிறது.

News March 31, 2026

மனைவியிடம் அனுமதியின்றி உறவும் ரேப் தான்.. சின்மயி

image

திருமணம் என்ற பெயரில் பெண்ணின் அனுமதியின்றி அவளிடம் உறவு கொள்வதும் பாலியல் வன்கொடுமைதான் என்று பாடகி சின்மயி X-ல் பதிவிட்டுள்ளார். ‘Chiraiya’ என்ற வெப் தொடரில், பெண்ணின் சம்பந்தமின்றி கணவர் உறவு கொள்ளும் காட்சிக்கு அவர் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும், Arranged Marriage-ல் கணவரைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்வதற்கு மனைவிக்கு போதுமான நேரமில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

error: Content is protected !!