News November 23, 2024
MAHA ELECTION: வாகை சூடும் கேப்டன் தமிழ்ச்செல்வன்!

மகாராஷ்டிராவில் தமிழர்கள் அதிகம் நிறைந்த தொகுதியான சயானி கோலிவாடாவில் பாஜக சார்பில் கேப்டன் தமிழ்ச்செல்வனும், காங்கிரஸ் சார்பில் கணேஷ் குமாரும் களம் கண்டுள்ளனர். இரு தமிழர்கள் மோதிக் கொள்ளும் இத்தொகுதியில், கேப்டன் தமிழ்செல்வன் முன்னிலையில் உள்ளார். ஏற்கனவே இத்தொகுதியில் இரு முறை எம்எல்ஏவான இவர், புதுக்கோட்டையை பூர்வீகமாக கொண்டவர். கணேஷ் குமார் நெல்லையை பூர்வீகமாக கொண்டவர் ஆவார்.
Similar News
News December 1, 2025
சிவகங்கை பஸ் விபத்து: PM மோடி இரங்கல்

காரைக்குடி அருகே <<18432348>>அரசு பஸ்கள் விபத்தில்<<>> ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகுந்த வேதனை அளிப்பதாக PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உறவுகளை இழந்தவர்களுக்காக பிரார்த்திப்பதாக கூறிய அவர், PMNRF-ல் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹2 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு ₹50,000 வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News December 1, 2025
கேப்டன் கில்லின் நிலை என்ன?

SA-வுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், கில்லுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக டெஸ்ட் & ODI தொடரில் இருந்து விலகிய அவர், இன்று BCCI-யின் சிறப்பு மையத்தில் (CoE) பயிற்சியை தொடங்கவுள்ளாராம். ஓரிரு நாள்களில் பேட்டிங் பயிற்சியை அவர் தொடங்குவார் என்றும், அதை தொடர்ந்தே SA-வுக்கு எதிரான T20 போட்டிகளில் கில் விளையாடுவாரா இல்லையா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என கூறப்படுகிறது.
News December 1, 2025
₹8,119 கோடிக்கு கோயில் நிலங்கள் மீட்பு: சேகர்பாபு

திமுக ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் தற்போது வரை 3,865 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மேலும், ₹8,119 கோடி மதிப்பிலான 8,000 ஏக்கர் பரப்புள்ள கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். ₹1,557 கோடிக்கு உபயதாரர்கள் நிதி உதவி வழங்கி உள்ளதாகவும், அதன் மூலம் 12,000 கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்றுள்ளன என்றும் அவர் கூறினார்.


