News January 15, 2025
மதுரை- தூத்துக்குடி ரயில் திட்டம் கைவிடல்? விளக்கம்

மதுரை – தூத்துக்குடி ரயில் திட்டத்தை கைவிட TN அரசே காரணம் என வெளியான தகவலுக்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், 5 நாட்களுக்குப் பிறகு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கமளித்துள்ளார். அதில், இத்திட்டத்தில் TN அரசிடம் எந்த நிலப்பிரச்னையும் இல்லை என்று கூறிய அவர், தூத்துக்குடி குறித்த கேள்வியை, தான் தனுஷ்கோடி என புரிந்துகொண்டு பதிலளித்ததாகவும் தெளிவுப்படுத்தியுள்ளார்.
Similar News
News August 23, 2025
கூட்டணி ஆட்சி குழப்பம்.. அதிமுக மா.செக்கள் கூட்டம்

ஆக.30-ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி அமைத்ததில் மூத்த நிர்வாகிகள் சிலர் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகும் நிலையில், இக்கூட்டம் நடைபெறவுள்ளது. அத்துடன் நேற்று நடைபெற்ற BJP பூத் கமிட்டி மாநாட்டில், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என அமித்ஷா பேசியது மீண்டும் கூட்டணியில் குழப்பத்தை உண்டாக்கியுள்ளது.
News August 23, 2025
FIFA உலகக் கோப்பை: முக்கிய அறிவிப்பு வெளியிட்ட டிரம்ப்

FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை USA, கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகள் நடத்துகின்றன. இப்போட்டிகள் 16 மைதானங்களில் நடைபெறுகின்றன. கடைசியாக 1994-ல் இத்தொடரை USA நடத்தியிருந்தது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து FIFA தலைவர் ஜியானி இன்ஃபாண்டினோ உடன் டிரம்ப் ஆலோசனை நடத்தினார். இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த போட்டிகளைக் காண ரஷ்ய அதிபர் புடின் வரலாம் எனவும் தெரிவித்தார்.
News August 23, 2025
சென்னையில் மழை.. காலையிலேயே துயர மரணம்

சென்னையில் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வரலட்சுமி என்ற தூய்மை பணியாளர், இன்று காலை வேலைக்கு செல்லும்போது மழை நீரில் அறுந்து கிடந்த மின் வயரை மிதித்ததால், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இவருக்கு 12 வயதில் பெண் குழந்தையும், 10 வயதில் ஆண் குழந்தையும் உள்ளார்கள். வீட்டின் ஒரே சம்பாதிக்கும் நபர் இவர்தான். தற்போது அம்மாவை பறிகொடுத்த 2 குழந்தைகளும் யாரும் இல்லாமல் தவிக்கின்றனர்.