News March 16, 2024
மதுரை: ஊர்காவல் படையில் சேர அழைப்பு

மதுரை மாநகர் காவல் ஆணையரின் உத்தரவுப்படி, ஊர்காவல்படைக்கு வரும் 20ம் தேதி அன்று ஆள் சேர்ப்பு முகாம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. விருப்பமும், சேவை மனப்பான்மையும் கொண்டவர்கள் இதில் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் கோகலே ரோட்டில் உள்ள ஊர்காவல்படை அலுவலகத்தில் வரும் 18, 19ம் தேதிகளில் காலை 10 மணிமுதல் மாலை 6 மணி வரை விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 23, 2025
மீனாட்சிம்மன் கோவில் நவராத்திரி விழா: முழு அட்டவணை பாருங்க!

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வரும் 23-09-2025 முதல் 02-10-2025 வரை நவராத்திரி விழா நடைபெற உள்ளது. விழாவுக்கான அம்பாள் அலங்காரங்கள் வருமாறு:
23-09-2025 – ஶ்ரீ ராஜேஸ்வரி அலங்காரம்
24-09-2025 – வளையல் விற்றது
30-09-2025 – ஶ்ரீ மகிஷாசுரமர்த்தினி திருக்கோலம்
01-10-2025 – சிவ பூஜை
02-10-2025 – விஜயதசமி
கொலு மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
மற்றவர்களும் பயன் பெற SHARE பண்ணுங்க.
News September 23, 2025
மதுரை: மழை நெருங்குது! – மக்களுக்கு அறிவுரை

மதுரையில் மழைக்கால மின்விபத்துகளை தடுக்க பாதுகாப்பு அறிவுரை:
1.அறுந்த கம்பிகள், கம்பங்கள் அருகில் செல்வதை தவிர்க்கவும்.
2.இடி, மின்னலின்போது வெட்டவெளி, மரத்தடி, செல்போன் பயன்படுத்த வேண்டாம்.
3.சுவர்களில் தண்ணீர் கசிவு இருந்தால் மின்சாதனங்களை தவிர்க்கவும்.
அவசர உதவிக்கு 9445859032, 9445859033, 9445859034 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.
News September 23, 2025
மதுரை: ராணுவ கனவு பறிபோனதால் தற்கொலை

மதுரை அருள்தாஸ்புரம் பாலமுருகனின் 17 வயது மகன் தனியார் கல்லுாரியின் முதலாமாண்டு மாணவர். சிறு வயதிலேயே ராணுவத்தில் சேர வேண்டும் என விரும்பி, அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். சமீபத்தில் ஈரோட்டில் ராணுவத்திற்கான ஆள் தேர்வு நடந்தது.இதில் பங்கேற்ற நிலையில் கையில் பச்சை குத்தியிருந்ததால் நிராகரிக்கப்பட்டார். இதனால் விரக்தி அடைந்து ஊருக்கு திரும்பியவர், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.